இனிமேல் டெங்குவிற்கு புதிய தடுப்பூசியா – ஜப்பானிய மருந்து நிறுவனத்தின் அறிவிப்பு

சிங்கப்பூரில் இன்னும் ஒரு வருடத்தில் புதிய டெங்கு தடுப்பூசி வருகிறது. டெங்கு நோயால் பாதிக்கப்பட்டவர் மற்றும் படாதவர்கள் என அனைவருக்கும் ஏற்ற புதிய டெங்கு தடுப்பூசி கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்தில் ஐரோப்பா மற்றும் சிங்கப்பூர் போன்ற டெங்கு பரவும் நாடுகளில் ஒப்புதலுக்காக சமர்ப்பித்துள்ளது ஜப்பானிய மருந்து நிறுவனமான டேகேடா
உலகளவில் டெங்குவிற்கான அங்கீகரிக்கப்பட்ட ஒரே தடுப்பூசி டெங்வாக்ஸியா ஆகும். இனிமேல் டேகேடாவின் தடுப்பூசி பயன்படுத்த அங்கீகரிக்கப்பட்டால், இந்த வரம்பு உடைவதை காணலாம்.

“ஒரு வருடத்திற்குள் சில நாடுகளில் (டேகேடா டெங்கு தடுப்பூசி) அங்கீகரிக்கப்படுவதை நீங்கள் பார்க்கலாம்” என்று சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் பாங், லீ குவான் யூ தெரிவித்துள்ளார்.

டேகேடாவின் தடுப்பூசியான- TAK-003, மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவதைத் தடுப்பதில் 84 சதவீதமும், அறிகுறியோடு இருக்கும் நோய்த்தொற்றைத் தடுப்பதில் 61 சதவீதம் பயனுள்ளதாக இருப்பதாகவும், ஐந்து நாட்களுக்கு முன்பு வெளியிடப்பட்ட 3 ஆம் கட்ட மருத்துவ பரிசோதனையின் தரவுகளின்படி கூறப்பட்டுள்ளது.

கோவிட்-19 தொற்றுநோய், தடுப்பூசி விழிப்புணர்வை ஊக்குவித்தது மற்றும் தடுப்பூசியைச் சுற்றியுள்ள சில சிக்கல்களை முன்னணியில் கொண்டு வந்துள்ளது என்று மருந்து நிறுவனங்கள் மற்றும் தொற்று நோய் நிபுணர்கள் கூறுகின்றனர்

சிங்கப்பூரில் டெங்குவின் பாதிப்பு அதிகரித்து வருகிறது. இந்த ஆண்டு மட்டும் 12,000 க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர் அனால் 2021 ஆம் ஆண்டில் மொத்தமே 5,258 பேர் மட்டுமே பாதிக்கப்பட்டிருந்தனர்.

நாடு முழுவதும் ஜூன் முதல் அக்டோபர் வரை டெங்கு காய்ச்சல், உச்சக்கட்டத்தை நுழையும் என்பதால், கொசுக்கள் பெருகும் இடங்களை அகற்றுவதற்கு “உடனடி நடவடிக்கை” எடுக்குமாறு அதிகாரிகள் அனைவரும் வலியுறுத்தியுள்ளனர்.