சுனாமி போன்ற பேரிடர்களில் இருந்து சிங்கப்பூரை பாதுகாக்கும் Polder திட்டம் – கடல் மட்டம் உயரும் போது ஏற்படும் ஆபத்தைத் தவிர்க்க Polder கட்டமைப்பு – அமைச்சர் Desmond Lee

desmond lee visit to Pulau Tekong polders

சிங்கப்பூரின் Pulau Tekong தீவில் தூண்களை உருவாகும் திட்டம் பாதியளவு நிறைவடைந்துள்ளது. தேசிய வளர்ச்சி அமைச்சர் Desmond Lee 2024-ஆம் ஆண்டின் இறுதிக்குள் கட்டடப் பணிகள் முழுவதுமாக நிறைவு செய்யப்படும் என்று ஞாயிற்றுக்கிழமை (April 17) கூறினார்.

Polders என்பதை கடல் மட்டத்திற்கு கீழே உள்ள நிலப் பகுதிகள் ஆகும். வடிகால் கால்வாய்கள், நீர் நெறிச் சுவர் மற்றும் பம்பிங் ஸ்டேஷன்கள் ஆகியவற்றின் மூலம் இவை மீட்டெடுக்கப் படுகின்றன. பருவநிலை மாற்றத்தால் கடல்மட்டம் உயர்வதை தடுத்து பேரிடரில் இருந்து சிங்கப்பூரை பாதுகாக்க அவை உதவும்.

முதன்முதலில் இந்த திட்டம் 2016 ஆம் ஆண்டு தேசிய வளர்ச்சி அமைச்சகம் மற்றும் வீட்டு வசதி மேம்பாட்டு வாரியத்தால் அறிவிக்கப்பட்டது. கடந்த வாரம் Pulau Tekong தீவிலுள்ள Polder திட்டத்தை பார்வையிட்டதாக பிரதமர் Lee பேஸ்புக் பக்கத்தில் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தார்.

பார்வையிட்ட திட்டப்பணிகள் குறித்து பிரதமர் விவரித்ததாவது :
சுற்றுச்சுவர் அமைக்கப்பட்டு, மத்தாப்பு சுவர் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது

Polder-க்குள் தாழ்வான நிலங்கள் உருவாக்கப்பட்டு ,நிலத்தை பலப்படுத்தும் வகையில் மண் மேம்பாட்டு பணிகள் நடந்து வருவதாக கூறினார்.
முக்கிய வசதிகளான பம்பிங் ஸ்டேஷன்கள், மின் துணை மின் நிலையங்கள் போன்றவற்றை உருவாக்குவதற்கான உள்கட்டமைப்பு பணிகள் தொடங்கப்பட்டுள்ளன என்றார்.

சிங்கப்பூர் ,நெதர்லாந்துடன் ஒருங்கிணைந்து Polder-ஐ கட்டமைத்து ஐரோப்பிய நாட்டினரின் அனுபவத்தைப் பயன்படுத்தி சிங்கப்பூரின் வெப்ப மண்டல சூழலுக்கு ஏற்றவாறு மாற்றி அமைத்துள்ளது. சிங்கப்பூரின் ஒருசில பகுதிகள் சராசரி கடல் மட்டத்திலிருந்து 4மீ அல்லது அதற்கும் குறைவாக உள்ளன. காலநிலை மாற்றத்தின் போது சுனாமி போன்ற பேரிடர்களுக்கு இது வழிவகுக்கும் என்று அமைச்சர் கூறினார்.