லக்கி பிளாசாவில் S$132,000 மதிப்புள்ள வைர மோதிரத்தை திருடி வெளிநாட்டுக்கு தப்பி ஓடிய இருவர்

increased-screenings-enhancement-measure changi airport
Pic: AFP

லக்கி பிளாசாவில் உள்ள அடகுக் கடையில் இருந்து சுமார் S$132,000 மதிப்புள்ள வைர மோதிரத்தைத் திருடிய சந்தேகத்தில் இருவர் பிடிபட்டுள்ளனர்.

அவர்கள் இருவரும் மலேசியாவுக்குத் தப்பிச் சென்ற நிலையில் தற்போது கைது செய்யப்பட்டு சிங்கப்பூர் காவல்துறையிடம் ஒப்படைக்கப்பட்டனர்.

வெளிநாட்டினர் இனி கட்டாய அனுமதி வாங்க வேண்டும் – சிங்கப்பூர் வெளியிட்ட அறிவிப்பு

இந்த சம்பவம் குறித்து கடந்த ஜூலை 16 அன்று மாலை 6.30 மணிக்கு முன்னதாகவே புகார் வந்ததாக போலீசார் தெரிவித்தனர்.

அதில் 48 வயதுமிக்க ஆடவர் ஒருவர் மோதிரத்தை எடுத்துக்கொண்டு அந்த கடையில் இருந்து தப்பி ஓடியதாகக் கூறப்படுகிறது.

விசாரணையின் அடிப்படையில், டாங்லின் போலீஸ் பிரிவைச் சேர்ந்த அதிகாரிகள் அவர்கள் இருவரின் அடையாளத்தையும் கண்டறிந்தனர்.

ஆனால், அவர்கள் இருவரும் சிங்கப்பூரில் இருந்து மலேசியாவிற்கு ஒரு மணி நேரத்திற்குள் தப்பி சென்றதாக போலீசார் தெரிவித்தனர்.

நேற்று முன்தினம் (ஜூலை19 ) கோலாலம்பூர் ஏர்போர்ட்டில் இருந்து அவர்கள் இருவரையும் மலேசிய போலீசார் கைது செய்தனர்.

அதன் பின்னர் அவர்கள் சிங்கப்பூர் போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டனர். இன்று அவர்கள் மீது குற்றம் சாட்டப்படும் என சொல்லப்பட்டுள்ளது.

சிங்கப்பூரின் முக்கிய செய்திகளை உடனே அறிய Tamil Micset வாட்ஸ்ஆப் குழுவில் இணையுங்கள் – கிளிக் செய்யுங்கள்

வித்தியாசமான முறையில் Singapore 4D டிராவில் பந்தயம் கட்டும் வாடிக்கையாளர்கள் – Singapore Pools வெளியிட்ட அறிவிப்பு