மின்னொளியில் ஜொலிக்கும் லிட்டில் இந்தியா… தொடங்கியது தீபாவளி ஒளியூட்டு!

little india illegally working 47 people investigated

இந்தியாவில் முக்கிய பண்டிகைகளில் ஒன்று தீபாவளி. இந்த பண்டிகையை இந்தியா முழுவதும் உள்ள மக்கள் புத்தாடை அணிந்தும், பட்டாசுகளை வெடித்தும், அக்கம்பக்கத்தினருக்கு இனிப்புகளை வழங்கியும் கொண்டாடி வருகின்றனர். அதேபோல், சிங்கப்பூர், மலேசியா, கனடா, ஜப்பான், அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட நாடுகளில் வசிக்கும் இந்தியர்களும் தீபாவளியை ஆண்டுதோறும் மிகச்சிறப்பாகக் கொண்டாடி வருகின்றன.

அந்த வகையில், வரும் நவம்பர் மாதம் 4- ஆம் தேதி அன்று இந்தியாவில் தீபாவளி பண்டிகை கொண்டாடவுள்ளது. இந்த நிலையில், தமிழர்கள் அதிகம் வசிக்கும் நாடான சிங்கப்பூரில், அனைத்து வகையான தமிழர் பண்டிகைகளும் வெகு விமர்சையாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில், எப்போதும் பரப்பாகவும், கடைகள் நிறைந்து காணப்படும் பகுதியான லிட்டில் இந்தியாவில் தீபாவளி ஒளியூட்டு தொடங்கியது.

சிங்கப்பூரில் தொழிற்சாலை உற்பத்தி வளர்ச்சி ஆகஸ்டில் குறைந்தது!

இதனால் லிட்டில் இந்தியா முழுவதும் வண்ணமின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு மின்னொளியில் ஜொலிக்கிறது. இங்கு ஒவ்வொரு ஆண்டும் ஒரு கருப்பொருள் அடிப்படையில், ஒளியூட்டு அம்சங்கள் வடிவமைக்கப்படும். அதன் தொடர்ச்சியாக, இவ்வாண்டு, இந்திய கட்டடக கலையின் சிறந்த அம்சங்களில் ஒன்றான கோபுரம் லிட்டில் இந்தியாவின் நுழைவு வாயிலை அலங்கரிக்கிறது.

அழகிய வடிவமைப்பில் கோபுர முகப்பும், அதன் இருபுறமும் நுண்ணிய வேலைப்பாடுமிக்க கல் தூண்கள் போன்ற அலங்காரமும் இடம் பெற்றிருந்தது. நவம்பர் 21- ஆம் தேதி வரை தீபாவளி ஒளியூட்டு இடம் பெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இளைஞர்கள் முதல் முதியவர்கள் வரை பல்வேறு தரப்பினரும் கண்கவர் வண்ணமிகு மின் அலங்காரங்களை புகைப்படம் எடுத்து மகிழ்கின்றனர். இதனால் லிட்டில் இந்தியாவில் தீபாவளி பண்டிகை களைக்கட்டியது என்றே கூறலாம்.

முன்னதாக, லிட்டில் இந்தியாவில் நேற்று (25/09/2021) இரவு நடந்த இவ்வாண்டுக்கான ஒளியூட்டு விழாவை முன்னிட்டு ‘தீபாவளி உற்சவம்’ மற்றும் கலை நிகழ்ச்சிக்கும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த நிகழ்ச்சியில், பிரதமர் அலுவலகத்தின் அமைச்சர் இந்திராணி ராஜா, வர்த்தக தொழில்துறை துணை அமைச்சர் ஆல்வின் டான், நாடாளுமன்ற உறுப்பினர் டெனிஸ் புவா உள்ளிட்டோர் கலந்துக் கொண்டனர். நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக மனிதவள அமைச்சரும், வர்த்தக தொழில் இரண்டாம் அமைச்சருமான டான் லீ செங் கலந்துக் கொண்டார்.

சிங்கப்பூரில் கொரோனா பாதிப்பு குறித்த முழுமையான தகவல்கள்!

கடந்த 2001- ஆம் ஆண்டு முதல் ‘லிஷா’ எனும் இந்திய வர்த்தகர்கள், மரபுடைமை சங்கம் ஆகியவை இணைந்து, ஆண்டுதோறும் லிட்டில் இந்தியாவில் ‘தீபாவளி ஒளியூட்டு’ விழாவிற்கான ஏற்பாடுகளை செய்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.