சிங்கப்பூரில் தொழிற்சாலை உற்பத்தி வளர்ச்சி ஆகஸ்டில் குறைந்தது!

Photo: Wikipedia

சிங்கப்பூரில் கொரோனா கட்டுப்பாடுகளால் பொருளாதாரம் மிக கடுமையாகப் பாதிக்கப்பட்டது. சிங்கப்பூரர்கள் மற்றும் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் தங்கள் வேலை வேலையை இழந்தனர். இந்த நிலையில், பொருளாதாரத்தை மீட்டெடுக்கவும், புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்கவும், பன்னாட்டு தகவல் தொடர்பு தொழில் நுட்பத்துறை நிறுவனங்களுடன் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. இதன் பயனாக, உலகின் முன்னணியில் உள்ள நிறுவனங்கள் சிங்கப்பூரில் தொழில் தொடங்க முதலீடு செய்துள்ளனர்.

சிங்கப்பூரில் மேலும் 1,650 பேருக்கு கொரோனா நோய்த்தொற்று!

இந்த நிலையில், சிங்கப்பூரில் தொழிற்சாலையின் உற்பத்தி வளர்ச்சி ஆகஸ்ட் மாதம் குறைந்தது. உற்பத்தித்துறை வளர்ச்சி ஓராண்டுக்கு முன்பு இருந்ததைக் காட்டிலும், கடந்த ஆகஸ்ட் மாதம் 11.2% குறைந்தது. இது ஜூலை மாதத்தில் 16.4% ஆக இருந்தது. பொருளாதார மேம்பாட்டு வாரியத்தின் (Economic Development Board -‘EDB’) புள்ளிவிவரங்களின்படி, உயிர் மருத்துவ உற்பத்தியைத் தவிர்த்து, ஆகஸ்ட் மாதத்தில் உற்பத்தி 13.6% விரிவடைந்தது.

தொழிற்சாலையின் உற்பத்தி வளர்ச்சி மாதாந்திர அடிப்படையில் அதிகரித்தது. ஆகஸ்ட் மாதம் 5.7% மேம்பட்டது. உயிர் மருத்துவ உற்பத்தி விலக்கப்பட்டபோது இது 8.8% ஆக உயர்ந்தது. உயிர் மருத்துவத் துறை உற்பத்தியை விலக்கிவிட்டுப் பார்த்தால் ஆகஸ்ட் மாத வளர்ச்சி 13.6 நாட்டின் பொருளாதாரத்துக்கு மிகவும் கைகொடுக்கும்; மின்னணுத்துறை 15.4% விரிவடைந்தது. கணினி தொடர்பான பொருள் தயாரிப்பு மற்றும் தரவு சேமிப்பு ஆகியப் பிரிவுகளைத் தவிர எஞ்சிய எல்லாப் பிரிவுகளிலும் வளர்ச்சிப் பதிவானது.

தொடர்ந்து அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு- உணவகங்களில் இருவர் மட்டுமே ஒன்றாக அமர்ந்து உணவருந்த அனுமதி!

கடல் மற்றும் கடல் பொறியியல் பிரிவு 36.9% ஆகவும், விண்வெளி பிரிவு 22%- ஆகவும் உயர்ந்தது. துல்லியமான பொறியியலுக்கான ஆண்டுதோறும் வளர்ச்சி 19% ஆக நிர்ணயிக்கப்பட்டது. துல்லியமான பொறியியல் உற்பத்தி ஒரு வருடத்திற்கு முன்பு இருந்ததை விட 22.9% அதிகரித்துள்ளது.

கொரோனா நோய்த்தொற்றுக்கு மத்தியில் உலக எண்ணெய் மற்றும் எரிவாயு சந்தை, சர்வதேச பயணக் கட்டுப்பாடுகளால் புதிய ஆர்டர்கள் இல்லாமல் அத்துறைகள் பாதிக்கப்பட்டது. கடந்த ஆண்டு கப்பல் கட்டும் தளங்கள் மற்றும் விண்வெளி நிறுவனங்களின் செயல்பாட்டு நிலைகள் அதிகரித்தன என்று புள்ளி விவரங்கள் கூறுகின்றன.