சிங்கப்பூரில் மேலும் 1,650 பேருக்கு கொரோனா நோய்த்தொற்று!

Photo: Ooi Boon Keong/TODAY)

சிங்கப்பூரில் தற்போது கொரோனா பரவல் அதிகரித்துள்ளது. இதனால் கொரோனா பரவலைக் கட்டுக்குள் கொண்டு வரும் விதமாக சுகாதாரத்துறை அமைச்சகம் பல்வேறு கட்டுப்பாடுகளை அறிவித்துள்ளது.

இந்த நிலையில், கொரோனா பாதிப்பு தொடர்பாக சுகாதாரத்துறை அமைச்சகம் நேற்று (24/09/2021) வெளியிட்டிருந்த செய்திக் குறிப்பில், “சிங்கப்பூரில் நேற்று (24/09/2021) மதியம் நிலவரப்படி, சுமார் 1,650 பேருக்கு கொரோனா நோய்த்தொற்று உறுதிச் செய்யப்பட்டுள்ளது. இதில் 1,369 பேர் சமூக அளவில் பாதிக்கப்பட்டனர். வெளிநாடுகளில் இருந்து சிங்கப்பூர் வந்த நான்கு வெளிநாட்டு பயணிகளுக்கு நோய்த்தொற்று உறுதிச் செய்யப்பட்டுள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் 391 பேர் 60 வயதிற்கு மேற்பட்டவர்கள் ஆவர். 277 பேர் வெளிநாட்டு ஊழியர்கள் தங்கும் விடுதிகளில் வசிப்பவர்கள் ஆவர்.

‘பூஸ்டர்’ தடுப்பூசித் தொடர்பாக சுகாதாரத்துறை அமைச்சகத்தின் புதிய அறிவிப்பு!

கொரோனவால் மேலும் மூன்று பேர் உயிரிழந்தனர். இதனால் கொரோனா பாதிப்பு காரணமாக உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 73 ஆக உயர்ந்துள்ளது. குறிப்பாக, உயிரிழந்தவர்களில் பெரும்பாலும் முதியவர்கள் ஆவர். இந்த மாதம் மட்டும் இதுவரை 18 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர்.

தற்போது, கொரோனா பாதிப்புக்கு சுமார் 1,092 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வருகின்றனர். இதில் 162 பேருக்கு ஆக்சிஜன் உதவியுடன் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில், 23 பேர் கவலைக்கிடமான நிலையில், ஐ.சி.யூ. பிரிவில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

செப்.27 முதல் அமலுக்கு வரும் கட்டுப்பாடுகள் என்னென்ன?

சிங்கப்பூரில் மொத்த மக்கள் தொகையில் சுமார் 4.46 மில்லியன் பேருக்கு முழுமையாக கொரோனா தடுப்பூசிப் போடப்பட்டுள்ளது.” இவ்வாறு சுகாதாரத்துறை அமைச்சகத்தின் அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.