‘பூஸ்டர்’ தடுப்பூசித் தொடர்பாக சுகாதாரத்துறை அமைச்சகத்தின் புதிய அறிவிப்பு!

Photo: Ministry Of Health/Facebook Page

சிங்கப்பூரில் கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில், சுகாதாரத்துறை அமைச்சகம் பல்வேறு கட்டுப்பாடுகளை அறிவித்துள்ளது. மேலும், பூஸ்டர் தடுப்பூசித் தொடர்பாகவும் சுகாதாரத்துறை அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

அதில், “கொரோனா தடுப்பூசி தொடர்பாக அமைக்கப்பட்ட நிபுணர் குழு கூடுதல் தடுப்பூசி டோஸ் தேவை குறித்த தரவை நெருக்கமாக ஆய்வு செய்து வருகிறது. 50 வயது முதல் 59 வயது வரை உள்ளவர்கள் முழுமையாகத் தடுப்பூசி போட்டுக்கொண்ட ஆறு மாதங்களுக்கு பிறகு ‘பூஸ்டர்’ தடுப்பூசியைப் போட்டுக்கொள்ளலாம் என்று நிபுணர் குழு பரிந்துரைத்துள்ளது. அதேபோல், 60 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட நபர்கள், முதியோர் பராமரிப்பு வசதிகளில் வசிப்பவர்கள் ‘பூஸ்டர்’ தடுப்பூசியைப் பெற வேண்டும் என்று பரிந்துரைத்தது. மேலும், அவர்களுக்கு ‘பூஸ்டர்’ தடுப்பூசி செலுத்துவதில் முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளது.

தொடர்ந்து அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு- உணவகங்களில் இருவர் மட்டுமே ஒன்றாக அமர்ந்து உணவருந்த அனுமதி!

சிங்கப்பூரில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகின்றது. இளைஞர்களுடன் ஒப்பிடும்போது 50 முதல் 59 வயதுடையவர்களுக்கு கொரோனா நோய்த்தொற்றின் தாக்கம் கடுமையாக இருக்கும். மேலும் தற்போதைய பாதுகாப்பு நிலைகள் காலப்போக்கில் குறையக்கூடும். ஆகையால், 50 முதல் 59 வயதிற்குட்பட்டவர்கள் ‘பூஸ்டர்’ தடுப்பூசியைப் போட்டுக் கொள்வது கூடுதல் பாதுகாப்பைத் தரும்.

‘பூஸ்டர்’ தடுப்பூசிப் போடத் தகுதிப் பெற்றவர்களுக்கு, ஒரு தனிப்பட்ட இணைய முகவரியுடன் குறுந்தகவல் அனுப்பப்படும். அதைக் கொண்டு அவர்கள் முன்பதிவு செய்துக் கொள்ளலாம். அதைத் தொடர்ந்து, அக்டோபர் 4- ஆம் தேதி முதல் 50 வயது முதல் 59 வயதுடையவர்கள் ‘பூஸ்டர்’ தடுப்பூசியைப் போட்டுக் கொள்ள ஒவ்வொரு கட்டமாக அழைக்கப்படுவர்” எனக் குறிப்பிட்டுள்ளது.

செப்.27 முதல் அமலுக்கு வரும் கட்டுப்பாடுகள் என்னென்ன?

சிங்கப்பூரில் செப்டம்பர் 15- ஆம் தேதி முதல் ‘பூஸ்டர்’ தடுப்பூசிப் போடும் திட்டம் தொடங்கப்பட்டது. இந்த திட்டத்தின் கீழ் சுமார் 91,500 பேர் ‘பூஸ்டர்’ தடுப்பூசியைப் போட்டுக் கொண்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.