செப்.27 முதல் அமலுக்கு வரும் கட்டுப்பாடுகள் என்னென்ன?

Photo: Today

சிங்கப்பூரில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்த நிலையில், கொரோனா தடுப்பு பணிகளில் முன்களப்பணியாளர்கள் தொடர்ந்து தீவிரம் காட்டி வருகின்றன. அதே நேரத்தில், கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த வேண்டிய நடவடிக்கைகள், மருத்துவமனைகளில் படுக்கை வசதிகளை அதிகரிப்பது உள்ளிட்டவைக் குறித்து சுகாதாரத்துறை அமைச்சகம் அதிகாரிகளுடன் தீவிர ஆலோசனை நடத்தியது.

மூலாதார பணவீக்கம் ஆகஸ்ட் மாதத்தில் அதிவேகமாக உயர்ந்தது!

ஆலோசனையை தொடர்ந்து, சுகாதாரத்துறை அமைச்சகம் நேற்று (24/09/2021) அறிவிப்பு ஒன்றை வெளியிட்டிருந்தது. அதன்படி, கொரோனா தடுப்பூசியை முழுமையாகப் போட்டுக் கொண்டவர்கள் உணவகங்கள் மற்றும் உணவு, பானக் கடைகளில் இரண்டு பேர் வரை மட்டுமே ஒன்றாக அமர்ந்து உணவருந்த அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

திருமண விழாக்களில் குழுவாக இரண்டு பேருக்கு மேல் கூடக் கூடாது. அனைவரும் கொரோனா தடுப்பூசியை முழுமையாகப் போட்டிருக்க வேண்டும். திருமண விருந்து உபசரிப்பில் 250 பேர் வரை கலந்துக் கொள்ள அனுமதி உண்டு. எனினும், அனைவரும் முழுமையாகத் தடுப்பூசி போட்டிருக்க வேண்டும். ஒரு மேசைக்கு 5 பேருக்கு மேல் ஒன்று கூடக் கூடாது.

வழிபாட்டு தளங்கள், வெளிப்புற நிகழ்ச்சிகள், நேரடி நிகழ்ச்சிகள், விளையாட்டு நிகழ்ச்சிகள் போன்றவற்றுக்குப் புதிய கட்டுப்பாடுகள் அறிவிக்கப்படவில்லை. தற்போது அமலில் உள்ள பாதுகாப்பு விதிமுறைகள் தொடர்ந்து பின்பற்றப்பட வேண்டும். மேலே குறிப்பிட்டுள்ள நிகழ்ச்சிகள் அனைத்திலும் முழுமையாகத் தடுப்பூசி போட்டுக்கொண்டவர்கள் 1,000 பேர் வரை கலந்துக் கொள்ளலாம்.

தொடர்ந்து அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு- உணவகங்களில் இருவர் மட்டுமே ஒன்றாக அமர்ந்து உணவருந்த அனுமதி!

வீட்டு நிகழ்ச்சிகளில் 10 பேர் வரை கலந்துக் கொள்ளலாம். 50 பேர் வரை கலந்துக் கொண்டால் Pre-Event Testing (PET) எனும் கொரோனா பரிசோதனை கட்டாயமாகும்.

சூழலில் சமூக ஒன்று கூடல்களில் கலந்துக் கொள்வோர் எண்ணிக்கை ஐந்தில் இருந்து மீண்டும் இரண்டாகக் குறைக்கப்படுகிறது. அதே போல், ஒரு நாளுக்கு ஒரு வீட்டுக்கு அதிகபட்சம் இருவர் மட்டுமே செல்லலாம். வீடுகளுக்குச் சென்றாலும், நண்பர்களை வெளியில் சென்று சந்தித்தாலும், ஒருவர் நாளொன்றுக்கு ஒரு ஒன்றுகூடலில் மட்டுமே பங்கேற்க வேண்டும்.

சிங்கப்பூரில் வேலை தேடுவோரைவிட வேலை வாய்ப்புகள் அதிகமாக உள்ளது; மனிதவள அமைச்சர்.!

தடுப்பூசிப் போட்டுக் கொள்ளாதவர்கள் மற்றும் வயதானவர்கள் இத்தகைய நிகழ்ச்சிகளில் பங்கேற்பதை முற்றிலுமாகத் தவிர்க்க வேண்டும். இந்த புதிய கட்டுப்பாடுகள் வரும் செப்டம்பர் 27- ஆம் தேதி முதல் அக்டோபர் 24- ஆம் தேதி வரை அமலில் இருக்கும். பின்னர், சூழ்நிலையைப் பொறுத்து கட்டுப்பாடுகள் மறு ஆய்வு செய்யப்படும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.