சிங்கப்பூரில் வேலை தேடுவோரைவிட வேலை வாய்ப்புகள் அதிகமாக உள்ளது; மனிதவள அமைச்சர்.!

Pic: File/Today

சிங்கப்பூரில் குளிர்பதன கம்ப்ரெஸ்ஸர்களின் (Refrigeration compressors) தயாரிப்புகளை 2022ம் ஆண்டு செப்டம்பர் மாத இறுதிக்குள் நிறுத்த போவதாக ஜப்பானிய பன்னாட்டு நிறுவனமான Panasonic அறிவித்துள்ளது.

இதன் விளைவாக சிங்கப்பூரில் 700 ஊழியர்களை பணிநீக்கம் செய்துள்ளதாகவும் பானாசோனிக் நிறுவனம் கூறியுள்ளது‌.

சிங்கப்பூர் மீது நம்பிக்கை வைத்த Panasonic நிறுவனத்திற்கு நன்றி – பிரதமர் திரு. லீ!

Panasonic நிறுவனத்தில் ஆள்குறைப்பு செய்யப்பட்ட ஊழியர்களுக்கு, ஆள்குறைப்புப் பணிக்குழு மாற்று வேலை தேடித்தரும் என  எதிர்பார்ப்பதாக மனிதவள அமைச்சர் டான் சீ லெங் தெரிவித்துள்ளார்.

தற்போதைய சாதகமான ஊழியர் சந்தை நிலவரத்தை அது பயன்படுத்திக்கொள்ளும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

சிங்கப்பூரில் வேலை தேடுவோரைவிட வேலை வாய்ப்புகள் அதிகமாக இருப்பதாய் மனிதவள அமைச்சர் டான் சீ லெங் கூறியுள்ளார்.

உலகளாவிய வர்த்தக நிலவரம் சவால்மிக்கதாய் இருப்பதால் ஆள்குறைப்பு செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டிருப்பதாக Panasonic நிறுவனம் தெரிவித்துள்ளது.

மேலும், விருந்தோம்பல், விமானப் போக்குவரத்து போன்ற துறைகளிலும் சவால்களை எதிர்நோக்கலாம் என்றும் மனிதவள அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

இரு பணிப்பெண்களின் உயிரை பறித்த லக்கி பிளாசா விபத்து – வெளிநாட்டு ஓட்டுனருக்கு சிறை