சிங்கப்பூர் மீது நம்பிக்கை வைத்த Panasonic நிறுவனத்திற்கு நன்றி; பாதிக்கப்பட்ட ஊழியர்களுக்கு NTUC, அமைப்புகள் உதவும் – பிரதமர் திரு. லீ!

Panasonic stop manufacturing refrigeration
Pic: Reuters

சிங்கப்பூரில் குளிர்பதன கம்ப்ரெஸ்ஸர்களின் (Refrigeration compressors) தயாரிப்புகளை 2022ம் ஆண்டு செப்டம்பர் மாத இறுதிக்குள் நிறுத்த போவதாக ஜப்பானிய பன்னாட்டு நிறுவனமான Panasonic நேற்று (செப்டம்பர் 23) அறிவித்துள்ளது.

உற்பத்தி நடவடிக்கைகள் மலேசியா மற்றும் சீனா ஆகிய இடங்களில் உள்ள அந்த நிறுவனங்களின் தற்போதைய வசதிகளில் மேற்கொள்ளப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.

இதன் விளைவாக சிங்கப்பூரில் 700 ஊழியர்களை பணிநீக்கம் செய்துள்ளதாகவும் பானாசோனிக் நிறுவனம் கூறியுள்ளது.

மூலாதார பணவீக்கம் ஆகஸ்ட் மாதத்தில் அதிவேகமாக உயர்ந்தது!

இந்நிலையில், சிங்கப்பூர் பிரதமர் திரு லீ இன்று (செப்டம்பர் 24) அவருடைய முகநூல் பக்கத்தில் சிங்கப்பூர் மீது நம்பிக்கை வைத்த Panasonic நிறுவனத்திற்கு நன்றியைத் தெரிவித்தார்.

சிங்கப்பூரில் குளிர்பதன கம்ப்ரெஸ்ஸர்களின் தயாரிப்புகளை நிறுத்த போவதாக Panasonic நிறுவனம் அறிவித்துள்ள செய்தி வருத்தமளித்ததாக அவர் குறிப்பிட்டார்.

Panasonic நிறுவனம் 100 மில்லியன் பாகத்தை உற்பத்தி செய்து முடித்ததைக் குறிக்கும் நிகழ்வில் தாம் கலந்துகொண்டதை பிரதமர் திரு லீ நினைவுகூர்ந்தார்.

சிங்கப்பூரில் Panasonic நிறுவனத்தின் குளிர்பதன Compressor உற்பத்தித் தொழிற்சாலை 1972ஆம் ஆண்டு தொடங்கப்பட்டு, இதுவரை சுமார் 285 மில்லியனுக்கும் அதிகமான பாகங்களை உற்பத்தி செய்து, இங்கிருந்து உலகெங்கும் ஏற்றுமதி செய்துள்ளது.

உலகில் தயாரிக்கப்பட்ட குளிர்பதன Compressor பாகத்தில், மூன்றில் ஒரு பங்கு சிங்கப்பூரில் இருந்து ஏற்றுமதி செய்யப்பட்டது என்பதையும் பிரதமர் லீ குறிப்பிட்டார்.

மேலும், பாதிக்கப்பட்ட ஊழியர்களுக்கு தகுந்த ஆதரவை வழங்க தேசியத் தொழிற்சங்கக் காங்கிரஸ் மற்றும் துறை சார்ந்த அமைப்புகள் உதவும் என்றும் பிரதமர் திரு லீ கூறியுள்ளார்.

சிங்கப்பூரில் செயல்பாட்டிற்கு வந்த முதல் சமூக சிகிச்சை வளாகம்.!