மூலாதார பணவீக்கம் ஆகஸ்ட் மாதத்தில் அதிவேகமாக உயர்ந்தது!

Photo: Wikipedia

சிங்கப்பூரில் கொரோனா பரவல் காரணமாக, அமல்படுத்தப்பட்டிருந்தக் கட்டுப்பாடுகள் காரணமாக நாட்டின் பொருளாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் பொருளாதாரத்தை மீட்டெடுக்கும் முயற்சியில் வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம் தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருகிறது.

இந்த நிலையில், சிங்கப்பூரில் மூலாதார பணவீக்கம் கடந்த இரண்டு ஆண்டுகளை விட, கடந்த ஆகஸ்ட் மாதத்தில் அதிவேகமாக உயர்ந்துள்ளது. உணவு விலைகள் அதிகமாக இருந்ததும், வாடகை மற்றும் இதரப் பொருட்களின் செலவு சிறிது குறைந்ததும் இதற்கு முக்கிய காரணம் என்று கூறுகின்றன பொருளாதார நிபுணர்கள்.

வேலை உருவாக்கத்திற்கான ஊக்குவிப்புத் திட்டம் நீட்டிப்பு!

மூலாதார பணவீக்கம் எவ்வாறு கணக்கிடப்படுகிறது என்றால் குடியிருப்பு, தனியார் சாலை போக்குவரத்துச் செலவுகளை நீக்கிவிட்டு கணக்கிடப்படுகிறது. ஆண்டுக்கு ஆண்டு அடிப்படையில் மூலாதார பணவீக்கம் கடந்த ஆகஸ்ட் மாதம் 1.1% ஆக அதிகரித்துள்ளது. இது கடந்த ஜூலை மாதம் 1% ஆக இருந்த நிலையில் ஆகஸ்ட் மாதத்தில் 0.1% கூடியது. அதேபோல், பணவீக்கம் கடந்த ஜூலை மாதம் 2.5% ஆக இருந்த நிலையில், ஆகஸ்ட் மாதம் 0.1% குறைந்து 2.4% ஆக உள்ளது.

ஆண்டுக்கு ஆண்டு அடிப்படையில் தனியார் போக்குவரத்து செலவு 10.8% கூடியது. இது, கடந்த ஜூலை மாதம் 12.6% ஆக இருந்தது. சேவைத்துறை பணவீக்கம் கடந்த ஜூலை மாதம் 1.3% ஆக இருந்த நிலையில், ஆகஸ்ட் மாதம் 1.2% ஆக குறைந்தது. மின்சாரம், எரிவாயு செலவு ஜூலையில் 9.9% கூடிய நிலையில், கடந்த ஆகஸ்ட் மாதம் 9.7% ஆக குறைந்தது. உணவுத்துறை பணவீக்கம் ஆகஸ்ட் மாதம் 1.5% ஆக அதிகரித்திருந்த நிலையில், இது ஜூலை மாதம் 1.1% ஆக இருந்தது.

சிங்கப்பூரில் இதுவரை இல்லாத அளவு தினசரி கொரோனா பாதிப்பு உயர்வு!

இந்த ஆண்டு முழுவதும் மூலாதார பணவீக்கம் சராசரியாக 0% முதல் 1% வரை இருக்கும் என்று கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல், ஒட்டுமொத்த பணவீக்கம் 1%- க்கும் 2%- க்கும் இடைப்பட்டதாக இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

தற்போது, பன்னாட்டு தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களும் சிங்கப்பூரில் தொழில் தொடங்கியுள்ளனர். இதன் மூலம் ஆயிரக்கணக்கான உள்ளூர்வாசிகளுக்கும் வேலை கிடைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.