சிங்கப்பூரில் இதுவரை இல்லாத அளவு தினசரி கொரோனா பாதிப்பு உயர்வு!

MOH revamps coronavirus reports
Pic: Ooi Boon Keong/TODAY

சிங்கப்பூரில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள், கொரோனா தடுப்பூசிப் போடும் பணிகளை சுகாதாரத்துறை அமைச்சகம் தொடர்ச்சியாக மேற்கொண்டிருந்த போதிலும், கடந்த சில தினங்களாக நாள்தோறும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனால், சிங்கப்பூரில் உள்ள அனைத்து அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் கொரோனா நோயாளிகளின் கூட்டம் அலை மோதியதாக தகவல் கூறுகின்றன. எனினும், அவர்கள் மருத்துவமனையில் காத்திருக்க வேண்டிய சூழல் ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது.

மின்சாரத்தில் இயங்கக்கூடிய முதல் பயணிகள் படகுச் சேவையைத் தொடங்கவிருக்கும் ‘Shell’ நிறுவனம்!

இந்த நிலையில் கொரோனா பாதிப்பு நிலவரம் குறித்து சிங்கப்பூர் சுகாதாரத்துறை அமைச்சகம் நேற்று (23/09/2021) வெளியிட்டிருந்த அறிவிப்பில், “சிங்கப்பூரில் நேற்று (23/09/2021) மதியம் நிலவரப்படி, புதிதாக 1,504 பேருக்கு கொரோனா நோய்த்தொற்று உறுதிச் செய்யப்பட்டுள்ளது. இதில் உள்ளூர் அளவில் 1,491 பேருக்கு நோய்த்தொற்று உறுதிச் செய்யப்பட்டுள்ளது. இவர்களில் 1,218 பேருக்கு சமூக அளவில் கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதில் 343 பேர் 60 வயதுக்கு மேற்பட்டோர் என்றும், 273 பேர் வெளிநாட்டு ஊழியர்கள் தங்கும் விடுதிகளில் வசிப்பவர்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல், வெளிநாடுகளில் இருந்து சிங்கப்பூருக்கு வந்தவர்களில் 13 பேருக்கும் கொரோனா நோய்த்தொற்று உறுதியாகியுள்ளது. சிங்கப்பூரில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 82,856 ஆக உயர்ந்துள்ளது.

தற்போது, கொரோனாவுக்கு மருத்துவமனைகளில் 1,120 பேர் சிகிச்சைப் பெற்று வருகின்றன. அவர்களில் 163 பேர் ஆக்சிஜன் உதவியுடன் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். மற்ற 23 பேர் கவலைக்கிடமான நிலையில் தீவிரச் சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

சிங்கப்பூர் ஆயுதப்படை, ஆகாயப்படையைச் சேர்ந்த வீரர்கள் அமெரிக்காவில் கூட்டுப்பயிற்சி!

கொரோனாவால் மேலும் இருவர் உயிரிழந்தனர். இதனால் சிங்கப்பூரில் கொரோனா பாதிப்பால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 70 ஆக உயர்ந்துள்ளது.

கொரோனா நோய்த்தொற்று கடந்த ஆண்டு தொடங்கியதில் இருந்து பதிவாகியிருக்கும் ஆக உயர்வான தினசரி எண்ணிக்கை இது என்பது குறிப்பிடத்தக்கது.