வேலை உருவாக்கத்திற்கான ஊக்குவிப்புத் திட்டம் நீட்டிப்பு!

(Photo: TODAY)

அதிக உள்ளூர் மக்களை வேலைக்கு அமர்த்துவதற்கான வணிக ஆதரவை வழங்கும் வேலை உருவாக்கத்திற்கான ஊக்குவிப்புத் திட்டம் (Jobs Growth Incentive- ‘JGI’) அடுத்தாண்டு மார்ச் ஆறு ஆண்டுகளுக்கு நீட்டிக்கப்படும் என்று மனிதவள அமைச்சகம் அறிவித்துள்ளது.

இந்த திட்டம் ஓராண்டிற்கு முன்பு தொடங்கப்பட்ட நிலையில், இதுவரை சுமார் 4,00,000 உள்ளூர்வாசிகள் பணியமர்த்தப்பட்டுள்ளனர். வேலை உருவாக்கத்திற்கான ஊக்குவிப்புத் திட்டத்தின் கீழ், தகுதிபெறும் ஊழியர்களின் சம்பளத்தில் முதல் 5,000 சிங்கப்பூர் டாலரில், கால்வாசித் தொகைக்கு நிறுவனங்கள் நிதி ஆதரவு பெறலாம். தகுதிபெற, நிறுவனம் அதன் ஒட்டுமொத்த உள்ளூர் பணியாளர்களை அதிகரிக்க வேண்டும் மற்றும் குறைந்தது1,400 சிங்கப்பூர் டாலரைச் சம்பாதிக்கும் குடியிருப்பு தொழிலாளர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும்.

சிங்கப்பூர் ஆயுதப்படை, ஆகாயப்படையைச் சேர்ந்த வீரர்கள் அமெரிக்காவில் கூட்டுப்பயிற்சி!

பட்ஜெட் 2021- ல், இந்த திட்டம் செப்டம்பர் வரை நீட்டிக்கப்பட்டது மற்றும் முதிர்ந்த தொழிலாளர்கள், குறைபாடுகள் உள்ள தொழிலாளர்கள் மற்றும் முன்னாள் குற்றவாளிகளுக்கு மானியங்கள் உயர்த்தப்பட்டன. அடுத்த ஆண்டு மார்ச் மாதம் வரை, இது இன்னும் ஆறு மாதங்களுக்கு தொடரும். ஆனால் ஊதிய ஆதரவு குறைக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் முதல் இந்த ஆண்டு மே வரை, சுமார் 400,000 உள்ளூர்வாசிகள் வேலை உருவாக்கத்திற்கான ஊக்குவிப்புத் திட்டத்தின் கீழ் சுமார் 58,000 வணிக ஆதரவால் பணியமர்த்தப்பட்டனர். இந்த வணிகங்களில் கிட்டத்தட்ட அனைத்து (99 சதவீதம்) சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் ஆகும். பாதி வணிக நிறுவனங்கள் ஒன்று முதல் இரண்டு உள்ளூர் தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்தின.

சிங்கப்பூரில் இதுவரை இல்லாத அளவு தினசரி கொரோனா பாதிப்பு உயர்வு!

மற்ற நிறுவனங்கள் அதிக தொழிலாளர்களைப் பணியில் அமர்த்தினர். வணிகங்கள் மொத்த வர்த்தகம், தொழில்முறை சேவைகள், தகவல் மற்றும் தகவல் தொடர்பு, உணவு சேவைகள் மற்றும் சில்லறை விற்பனை உள்ளிட்ட பல துறைகளில் தொழிலாளர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளன என்று மனிதவள அமைச்சகம் குறிப்பிட்டுள்ளது.

“வேலையில்லாமல் இருந்த இளைஞர்களுக்கு இந்த திட்டம் மிகவும் உதவியாக இருந்தது. இத்திட்டத்தின் மூலம் பலருக்கும் வேலை கிடைத்துள்ளது” என்கின்றனர் உள்ளூர்வாசிகள்.