சிங்கப்பூரில் செயல்பாட்டிற்கு வந்த முதல் சமூக சிகிச்சை வளாகம்.!

MOH Community treatment facilities
Pic: MOH

சிங்கப்பூரில் தெம்பனிஸ் பகுதியில் உள்ள முதல் மேம்படுத்தப்பட்ட COVID-19 சமூக சிகிச்சை வளாகம் (CTF) நேற்று (செப்டம்பர் 22) செயல்பாட்டிற்கு வந்துள்ளது.

சமூக சிகிச்சை வளாகத்திற்கு நேற்று முதல் நோயாளிகள் வர தொடங்கியுள்ளனர். சிறப்பாக ஏற்பாடு செய்யப்பட்ட வாகனங்களிலிருந்து COVID-19 நோயாளிகள் வெளி யே ற , அவர்களைத் தனி நபர் பாதுகாப்புச் சாதனம் (பிபிஇ) அணிந்திருந்த பணியாளர்கள் வரவேற்றனர்.

சிங்கப்பூரில் இதுவரை இல்லாத அளவு தினசரி கொரோனா பாதிப்பு உயர்வு!

NTUC சு கா தார தா தி மை இல்லம் அமைந்திருந்த இடத்தில் புதிய CTF தற்போது செயல்படுகிறது. அங்கு 250 படுக்கைகள் அமைந்துள்ளது. உடல்நிலை நலமாக இருந்தாலும் அணுக்கமான கண்காணிப்பு தேவைப்படும் நிலையில் வேறு சுகாதாரப் பிரச்சினைகள் உள்ள COVID19 நோயாளிகளுக்கு இந்தப் படுக்கைகள் ஒதுக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இதய , நரம்பியல், சுவாச நோய்கள் போன்ற நாள் பட்ட நோய்கள் உள்ளவர்கள், முதியவர்கள் ஆகியோரை இந்த வளாகம் கண் காணிக்கும் என்றும், அத்துடன் கிருமிதொற்றிய தாதிமை இல்லவாசிகளுக்கு, இங்கு வருவதற்கு முன்னுரிமை தரப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தாதிமை இல்லங்களில் வழக்கமாக இருக்கும் மருத்துவ, தாதிமைப் பணியாளர்களை விட, தெம்பனிஸ் வளாகத்தில் கூடுதல் ஆட்கள் இருப்பர் என்றும், மேலும் இங்கு மருத்துவக் கண்காணிப்புச் சாதனங்களும் இருக்கும் என்றும் சுகாதார அமைச்சகம் குறிப்பிட்டுள்ளது.

சிங்கப்பூரில் 700 ஊழியர்களை பணி நீக்கம் செய்த பானாசோனிக் (Panasonic) நிறுவனம்