இரு பணிப்பெண்களின் உயிரை பறித்த லக்கி பிளாசா விபத்து – வெளிநாட்டு ஓட்டுனருக்கு சிறை

Lucky Plaza car accident

லக்கி பிளாசா அருகில் இரண்டு பணிப்பெண்களின் உயிர்களை பறித்த விபத்தில் தொடர்புடைய ஓட்டுநருக்கு இன்று (செப் 24) இரண்டரை ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

மேலும், அந்த விபத்தில் நான்கு பேருக்கு காயம் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.

சிங்கப்பூரில் கொரோனா தொற்றால் மேலும் இரண்டு இறப்புகள் பதிவு

சோங் கிம் ஹோ (Chong Kim Hoe) என்ற அந்த 66 வயதான மலேசிய ஓட்டுநர், சிறையில் இருந்து விடுதலையானவுடன் 10 வருடங்களுக்கு அனைத்து வகை வாகனங்களையும் ஓட்டுவதற்கு தடை விதிக்கப்படுகிறது.

மரணத்தை ஏற்படுத்தும் வகையில் ஆபத்தான முறையில் வாகனம் ஓட்டியதற்காக அவர் சாலை போக்குவரத்து சட்டத்தின் கீழ் ஒரு குற்றத்தை ஒப்புக்கொண்டார்.

கடந்த 2019ஆம் ஆண்டு டிசம்பரில் ஏற்பட்ட இந்த விபத்தில் இரண்டு பிலிப்பைன்ஸ் நாட்டு பெண்கள் உயிரிழந்தனர்.

அந்த விபத்தன்போது, ​​41 மற்றும் 50 வயதுடைய அந்த இரண்டு பணிப்பெண்கள் மயக்க நிலையில் டான் டோக் செங் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

ஆனால் விபத்தில் ஏற்பட்ட கடுமையான காயங்களின் காரணமாக அவர்கள் இருவரும் உயிரிழந்தனர். அவர்கள் 6 பேரும் பிலிப்பீன்ஸ் நாட்டை சேர்ந்தவர்கள்.

சிங்கப்பூரில் 700 ஊழியர்களை பணி நீக்கம் செய்த பானாசோனிக் (Panasonic) நிறுவனம்