வெளிநாட்டு பணிப்பெண்ணுக்கு சிறை தண்டனை – CCTV காட்சிகளில் அம்பலமான குற்றங்கள்

Domestic helper jailed spore
PHOTO: Yahoo News Singapore

சிங்கப்பூரில் பணிபுரிந்த வெளிநாட்டு பணிப்பெண்ணுக்கு 12 வாரங்கள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

கடுமையான மறதி நோயால் பாதிக்கப்பட்ட 85 வயதான மூதாட்டியை பணிப்பெண் துன்புறுத்தியதாக சொல்லப்பட்டுள்ளது.

கிட்டத்தட்ட நிரம்பிய வெளிநாட்டு ஊழியர் விடுதிகள்.. வேலை அனுமதிக்கு நீண்ட காலம் எடுக்கலாம்

உணவளிக்கும் போது மூதாட்டியை பணிப்பெண் தாக்கியதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்நிலையில், இந்தோனேஷியாவைச் சேர்ந்த இன்டா நூர் வஹ்யுனிக்கு, நேற்று செவ்வாய்க்கிழமை (செப். 12) 12 வாரங்கள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.

அதேபோன்ற மற்றொரு குற்றச்சாட்டும் கருத்தில் எடுத்துக்கொள்ளப்பட்டன.

மூதாட்டியின் மகள் கடந்த ஜனவரி மாதம் 35 வயதான இன்டாவை வேலைக்கு எடுத்துள்ளார். மூதாட்டியை கவனித்து பராமரிப்பது தான் அவரின் வேலை.

முதியோர் மற்றும் சிறு குழந்தைகளை எவ்வாறு பராமரிக்க வேண்டும் என்பது குறித்து இன்டா முன்னர் நன்கு பயிற்சி பெற்றிருந்தார்.

ஒரு முறை முதலாளி தன் தாயின் கையில் காயங்களைக் கவனித்தார், இது குறித்து பணிப்பெண்ணிடம் கேட்க அவர் மறுத்துள்ளார்.

தாயை மருத்துவ பரிசோதனைக்கு அனுப்பப்போவதாக முதலாளி கூற, அதன் பிறகு தாம் அடித்ததாக இன்டா ஒப்புக்கொண்டார்.

பிறகு பலத்த சந்தேகம் அடைந்த முதலாளி , வீட்டில் CCTV பொருத்திய பிறகு இன்டா மேலும் துன்புறுத்திய காட்சிகள் சிக்கின.

இதனை அடுத்து இன்டாவை ஏஜெண்டிடமே திருப்பி அனுப்பிவைத்து விட்டு, போலீசில் புகார் அளித்தார்.

வேலையிடத்தில் 9.5 மீ உயரத்தில் இருந்து விழுந்து இறந்த ஊழியர்: “பாதுகாப்பு குறைபாடு தான் காரணம்”