ரொட்டி வாங்க காசு இல்லாமல் தவித்த வெளிநாட்டு பணிப்பெண்… ரொட்டியுடம் பணத்தையும் அள்ளிப்போட்டு கொடுத்த பெண்மணி

ரொட்டி வாங்க காசு இல்லாமல் தவித்த வெளிநாட்டு பணிப்பெண்... ரொட்டியுடம் பணத்தையும் அள்ளிப்போட்டு கொடுத்த பெண்மணி
Photo: Complaint Singapore/Facebook

ரொட்டி வாங்க காசு இல்லாமல் தவித்து நின்ற வெளிநாட்டு பணிப்பெண்ணுக்கு ரொட்டியுடம் சேர்த்து பணத்தையும் அள்ளிப்போட்டு கொடுத்த பெண்மணிக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.

சிங்கப்பூரில் வேலைபார்க்கும் வெளிநாட்டுப் பணிப்பெண் ஒருவர் நேற்று (அக்.15) இதனை ஃபேஸ்புக்கில் பதிவு செய்துள்ளார். அவர் சந்தித்த அந்த நல்ல மனிதரை பற்றி அதில் விவரித்தார்.

வெளிநாட்டு ஊழியர்களே சலுகையை பயன்படுத்துங்க.. இனி வெறும் S$15 செலுத்தி இந்த சேவையை பெறலாம்!

தாம் ​​கண்ணீருடன் இதை எழுதுவதாக குறிப்பிட்ட அவர், ரொட்டி வாங்க சென்றபோது அவருடைய பணம் காணாமல்போனதை உணர்ந்தார்.

இதனால் சோகமான அவர் தான் செய்த ஆர்டரை ரத்து செய்ததாக குறிப்பிட்டுள்ளார்.

“அப்போது திடீரென்று அந்த நல்லுள்ளம் கொண்ட பெண்மணி, நான் ஆர்டர் செய்த ரொட்டியை வாங்கி கொண்டு வந்து என்னிடம் கொடுத்தார்.”

ரொட்டியுடன் சேர்த்து அவர் கொடுத்த பிளாஸ்டிக் பையில் கொஞ்சம் பணத்தையும் அவர் வைத்திருந்ததாக கண்ணீருடன் அவர் குறிப்பிட்டார்.

பெண்மணி கொடுத்த பணத்தை எப்படியாவது திருப்பி செலுத்திவிடலாம் என்ற எண்ணத்தோடு, அந்தப் பெண்ணின் தொடர்பு எண்ணை பணிப்பெண் கேட்டார். ஆனால் அந்த பெண்மணி தொடர்பு எண்ணை கொடுக்க மறுத்துவிட்டார்.

“உங்களில் யாருக்காவது அவரை தெரிந்தால், தயவுசெய்து எனக்குத் தெரிவிக்கவும். நான் அவரை பார்க்க விரும்புகிறேன். அவர் செய்த உதவியை திருப்பி கொடுக்க விரும்புகிறேன்” என்று பணிப்பெண் கூறியுள்ளார்.

பூன் கெங்கில் உள்ள பேருந்து நிறுத்தத்தில் காத்திருக்கும் போது அந்தப் பெண்ணின் பின்னால் இருந்து எடுத்த புகைப்படத்தையும் அவர் பெண்மணியின் அடையாளமாக பதிவிட்டுள்ளார்.

எந்த பலனையும் எதிர்பாராது அந்த பெண்மணி செய்த உதவி அனைவரின் பாராட்டையும் பெற்று வருகிறது.

வெளிநாட்டு ஊழியர்களுக்கு அழைப்பு….. டிக்டாக்கில் வீடியோவைப் பதிவேற்றுங்கள்… பரிசுகளை வெல்லுங்கள்!