ஏஜென்சி கூறிய பொய்… முதலாளிக்கும், ஊழியருக்கும் மொழியால் ஏற்பட்ட சண்டை – போலீஸ் எடுத்த முடிவு

domestic-worker-employer-fight
Shin Min Daily News

சிங்கப்பூரில் வெளிநாட்டு பணிப்பெண்ணுடன் முதலாளி பெண் சண்டடையிட்டுக்கொண்டதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

மொழி தொடர்பான செய்தி பரிமாற்ற பிரச்சனைகள் மற்றும் தனது குழந்தையை தாக்கியதாக கூறி 28 வயதுடைய முதலாளி சண்டையிட்டதாக ஷின் மின் டெய்லி நியூஸ் தெரிவித்துள்ளது.

ஹூ என்ற அந்த பெண் கடந்த 2022 ஜூன் மாதம் ஏஜென்சி மூலம் அந்த வீட்டுப் பணிப்பெண்ணை வேலைக்கு அமர்த்தியதாகக் கூறப்பட்டுள்ளது.

கட்டிட உயரத்தில் இருந்து கீழே விழுந்த வெளிநாட்டு நபர் மரணம்

வீட்டுப் பணிப்பெண்ணின் வேலை என்னவென்றால், மூன்று மாத வயதுடைய இளைய குழந்தையை கவனித்துக்கொள்வதற்கும், வீட்டு வேலைகளில் அவரது மாமியாருக்கு உதவுவதற்கும் பணியில் அமர்த்தப்பட்டதாக ஹூ கூறினார்.

ஆங்கிலம் மற்றும் மாண்டரின் மொழிகளில் பணிப்பெண்ணிடம் தொடர்பு கொள்ள முடியும் என்று கூறி ஏஜென்சி வேலைக்கு சேர்த்துள்ளது.

ஆனால், பணிப்பெண்ணுக்கு சாப்பிடுவது மற்றும் குளிப்பது போன்ற எளிய வார்த்தைகளை கூட புரிந்து கொள்ள முடியவில்லை என்று ஹூ கூறினார்.

இதன் காரணமாகவே இவர்களுக்குள் சலசலப்பு இருந்துள்ளது. இருப்பினும் பணிப்பெண் தன்னை முதலில் அறைந்ததாக ஹூ குற்றம் சாட்டினார்.

சம்பவம் குறித்து காவல்துறை குற்றவியல் வழக்கு பதிவு செய்யவில்லை என ஹூ கூறினார்.

பணிப்பெண் மற்ற முதலாளிகளிடம் தொடர்ந்து பணியாற்றலாம் என்ற தனது கருத்தை வெளிப்படுத்திய ஹூ, பின்னர் அவர் வீட்டுக்கு வேறொரு புதிய வீட்டுப் பணிப்பெண்ணை பணியமர்த்தியுள்ளதாக கூறினார்.