தடுப்பூசி போட்டுக்கொண்ட இந்திய ஊழியருக்கு தொற்று – தங்கும் விடுதியில் ஊழியர்களுக்கு பரிசோதனை

Vaccinated worker infected with COVID-19: More than 1,500 in same dorm test negative
(Photo: AFP)

தடுப்பூசி முழுமையாக போட்டுக்கொண்ட இந்திய ஊழியர் ஒருவர் முன்னர் COVID-19 கிருமியால் பாதிக்கப்பட்டார்.

அதனை அடுத்து, அவருடன் அதே விடுதியில் வசிக்கும் சுமார் 1,500க்கும் மேற்பட்ட ஊழியர்களுக்கு மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

சிங்கப்பூரில் ஆடவர் ஒருவர் மரணம்: COVID-19 தடுப்பூசி சிக்கல்கள் காரணமல்ல – MOH

இந்நிலையில், அவர்கள் அனைவருக்கும் தொற்று பாதிப்பு இல்லை என்று உறுதியாகியுள்ளது என்று போக்குவரத்து அமைச்சர் ஓங் யே குங் தெரிவித்துள்ளார்.

பேஸ்புக் பதிவில், திரு ஓங் கூறுகையில், இந்திய ஊழியரின் நெருங்கிய தொடர்புகள் 156 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர் என்று கூறியுள்ளார்.

மேலும், அவர்கள் அனைவருக்கும் தொற்று பாதிப்பு இல்லை என்று உறுதியாகியுள்ளது. தனிமைப்படுத்தல் முடிந்து வெளியேற்றப்படுவதற்கு முன்னர் அவர்கள் அனைவருக்கும் மீண்டும் பரிசோதனை மேற்கொள்ளப்படும் என்றும் கூறியுள்ளார்.

23 வயதான இந்திய ஊழியர், சீஃப்ரண்ட் சப்போர்ட் கம்பெனியில் பணிபுரிந்து வருகிறார், மேலும் அவர் பிரானி டெர்மினல் அவென்யூவில் (Brani Terminal Avenue) அமைந்துள்ள தங்கும் விடுதியில் வசிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஊழியர்களின் வங்கி கணக்குகளை குறிவைக்கும் மோசடி – எச்சரிக்கை பதிவு