வெளிநாட்டு ஊழியர் விடுதிகளில் வசிக்கும் ஊழியர்கள் இது குறித்து தைரியமாக புகார் அளிக்கலாம்

dormitory foreign workers mom fast
(PHOTO: MOM)

வெளிநாட்டு ஊழியர்களுக்கு வழங்கப்படும் உணவு குறித்து ஏதேனும் புகார் இருப்பின் FAST குழு அதிகாரிகளிடம் தெரிவிக்கலாம் என MOM தெரிவித்துள்ளது.

அனைத்து விடுதிகளிலும் சோதனை கண்காணிப்பு தொடர்ந்து வழக்கம்போல நடைபெறுவதாக மனிதவள அமைச்சர் டான் சீ லெங் கூறினார்.

விடுதிகளில் உள்ள சமையலறை சுத்தம் மற்றும் ஒழுங்குமுறை சரியாக உள்ளதா என்பதையும் கண்காணிப்பதாக அவர் கூறினார்.

சாப்பிட்டுக்கொண்டும், போன் பயன்படுத்தியும் பேருந்தை இயக்கிய ஓட்டுனர் – வீடியோ வைரலானதை அடுத்து சஸ்பெண்ட்

வெளி இடங்களில் இருந்து உணவுகளை வாங்கும்போது முறையாக உரிமம் பெற்ற இடங்களில் இருந்து மட்டுமே விடுதி உரிமையாளர்கள் வாங்கலாம் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

வெளியில் இருந்து வரும் உணவுகள் ஊழியர் கையில் வந்து சேரும் வரை அவைகள் முறையாக கையாளப்படுகிறதா என்பதும் முறையாக கண்காணிக்கப்படுவதாகவும் அவர் சொன்னார்.

பின்பற்றதாக விடுதிகளுக்கு எச்சரிக்கையும், மேலும் விதிமுறைகளுக்கு எதிராக செயல்படும் உரிமையாளர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் எச்சரித்தார்.

இது குறித்து ஊழியர்கள் தைரியமாக புகார் அளிக்கலாம். Forward Assurance Support Team (FAST) என்ற மனிதவள அமைச்சகத்தின் குழுவிடம் புகார் அளிக்கும்படியும் அவர் பரிந்துரை செய்தார்.

Singapore 4D டிராவில் முதல், மூன்றாம் பரிசுக்கு ஒரே வெற்றி எண்… துள்ளிக் குதித்தவருக்கு கடைசியில் இருந்த ட்விஸ்ட்