சிங்கப்பூரில் 5 பெரிய தங்கும் விடுதிகளில் வசிக்கும் 10,000 பேருக்கு முதலில் தடுப்பூசி!

(Photo: TODAY)

சிங்கப்பூரில் வெளிநாட்டு ஊழியர்களுக்கான COVID-19 தடுப்பூசிகள், 5 பெரிய தங்கும் விடுதிகளில் வசிக்கும் 10,000 பேருக்கு முதலில் போடப்படும் என்று சுகாதார அமைச்சகம் (MOH) தெரிவித்துள்ளது.

தடுப்பூசி போட்டுக்கொள்ள உள்ள அந்த முதல் தொகுதி ஊழியர்கள் COVID-19 தொற்றுநோயால் இதுவரை பாதிக்கப்படாதவர்கள் என்று அமைச்சகம் கூறியுள்ளது.

தன் கஷ்டங்களை தள்ளிவைத்து, பிறருக்கு ஓடி சென்று உதவுவதில் சிறந்தவர்கள் வெளிநாட்டு ஊழியர்கள்…!

தடுப்பூசிகள் அந்த ஐந்து தங்கும் விடுதிகளில் வைத்து அவர்களுக்கு போடப்படும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

முழுமையாக தடுப்பூசி போடப்பட்ட ஊழியர்களுக்கு, தற்போதைய 14 நாள் சோதனைக்கு பதிலாக ஒவ்வொரு 28 நாட்களுக்கு ஒருமுறை சோதனை நடத்தப்படும்.

மேலும், தடுப்பூசிகள் படிப்படியாக மற்ற வெளிநாட்டு ஊழியர்களுக்கு போடப்படும் என்று MOH தெரிவித்துள்ளது.

சிங்கப்பூரின் COVID-19 மொத்த எண்ணிக்கையில் 90 சதவிகிதம் பேர் தங்கும் விடுதிகளில் வசிக்கும் வெளிநாட்டு ஊழியர்கள் ஆவார்கள்.

இந்த குழுவில் நோய்த்தொற்றுகள் கடந்த சில மாதங்களாக குறைந்துவிட்டன, பெரும்பாலான நாட்களில் எந்தவொரு பாதிப்பும் பதிவாகவில்லை.

தடுப்பூசி திட்டம், அதிக ஆபத்துள்ள குழுக்கள் மற்றும் ஆசிரியர்கள், தபால்காரர்கள் உள்ளிட்ட அத்தியாவசிய ஊழியர்களுக்கும் இது விரிவுபடுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

நன்கு பழக்கப்பட்ட வாட்ஸ்அப் தொடர்புகள் மூலம் ஊடுருவி மோசடி – காவல்துறை எச்சரிக்கை