வடகொரியாவின் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை சோதனைகளுக்கு சிங்கப்பூர் கண்டனம்!

Video Crop Image

கடந்த மார்ச் 16- ஆம் தேதி அன்று கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை சோதனைகளை வடகொரியா நடத்தியது. இந்த ஏவுகணை சோதனையை வடகொரியா அதிபர் கிம் ஜாங் உன், தனது மகளான ஜூ ஏவை நேரில் அழைத்துக் காண்பித்துள்ளார். இது தொடர்பான புகைப்படங்களும் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றனர்.

மூன்று நாள் அரசுமுறைப் பயணமாக மலேசியாவுக்கு செல்கிறார் சிங்கப்பூர் அதிபர் ஹலிமா யாக்கோப்!

ஒரே வாரத்தில் மூன்று ஏவுகணைகளை சோதனை செய்துள்ள வடகொரியாவுக்கு அமெரிக்கா, ஜப்பான், தென் கொரியா, சிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகள் கண்டனம் தெரிவித்துள்ளனர். சிங்கப்பூர் வெளியுறவுத்துறை அமைச்சகம் (Ministry Foreign Affairs, Singapore) வெளியிட்டுள்ள அறிக்கையில், “வடகொரியாவின் இத்தகைய சோதனைகள் ஆபத்தானவை மற்றும் ஐக்கிய நாடுகளின் பாதுகாப்பு கவுன்சில் தீர்மானங்களை மீறுவதாகும். எனவே, அத்தகைய நடவடிக்கைகளை சிங்கப்பூர் கடுமையாக எதிர்க்கிறது மற்றும் கண்டனம் செய்கிறது.

சர்வதேச சமூகத்தின் கடுமையான கவலைகளை அலட்சியம் செய்யாமல், அச்சுறுத்தும் நடவடிக்கைகளை நிறுத்தி விட்டு, சர்வதேச கடமைகள் மற்றும் கோட்பாடுகளுக்கு இணங்கி நடந்துக் கொள்ளும்படி, வடகொரியாவை சிங்கப்பூர் கேட்டுக் கொள்கிறது.

திருச்சி, சிங்கப்பூர் இடையேயான ‘ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்’ விமான சேவை- பயண டிக்கெட் முன்பதிவு விறுவிறு!

வடகொரியாவின் கோபப்படுத்தும் செயல்கள் கொரிய தீபகற்பத்தில் நீடித்த அமைதிக்கான வாய்ப்புகளைப் பாதிக்க செய்யும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.