சாலையின் நடுவே வாகனத்தை நிறுத்திவிட்டு வாயைப்பிளந்து தூங்கிய ஓட்டுநர் – தட்டி எழுப்பி கைது செய்த போலீஸ் (Video)

drink-driving-tanjong-pagar

சிங்கப்பூர்: சாலையின் நடுவே வாகனத்தை நிறுத்திவிட்டு வாயைப்பிளந்து தூங்கிக்கொண்டிருந்த ஆடவர் ஒருவரை போலீசார் கைது செய்தனர்.

மெதுவாக ஊர்ந்து சென்ற அவரின் கார், கெப்பல் ரோடு மற்றும் அன்சன் ரோடு சந்திப்பில் பலமுறை ஹாரன் சத்தம் எழுப்பியும் சாலையின் நடுவே நின்றது.

கட்டுப்பாட்டை இழந்து மரத்தில் கடுமையாக மோதிய பேருந்து… சம்பவ இடத்திலேயே ஓட்டுநர் பலி

பின்னர், நிலைதடுமாறி காரை ஓட்டிச் சென்றவர் வாயைத் பிளந்த நிலையில் தூங்கிக் கொண்டிருந்தார் என்றும் கூறப்பட்டுள்ளது.

சம்பவ இடத்தில் இருந்த போலீசார் தூங்கிக் கொண்டிருந்த டிரைவரை தட்டி எழுப்பினர். பின்னர் அவருக்கு போதைப்பொருள் சுவாச குழாய் சோதனை செய்யப்பட்டது.

இதனை அடுத்து, மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டிய சந்தேகத்தின்பேரில் 33 வயதான அவர் கைது செய்யப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்.

இச்சம்பவம் தஞ்சோங் பகார் பகுதியில் கடந்த அக்டோபர் 7 வெள்ளிக்கிழமை நள்ளிரவு 2.35 மணியளவில் நடந்தது.

சிங்கப்பூரில் இன்று முதல் நீக்கப்படும் கட்டுப்பாடுகள் – ஊழியர்களுக்கும் தளர்வுகள் அறிவிப்பு