கெலாங்கில் இருவரை அடித்து தூக்கி, வாகனத்தை நிறுத்தாமல் தப்பியோடிய ஓட்டுநர் கைது

கெலாங்கில்
SG Road Vigilante/Facebook

கெலாங்கில் இருவரை அடித்து தூக்கி தப்பியோடிய ஓட்டுநர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கடந்த மார்ச் 23 ஆம் தேதி நடந்த இந்த சம்பவத்தில், 51 வயது ஆடவர் ஒருவரும், 32 வயது பெண் ஒருவரும் படுகாயமடைந்தனர்.

ஜூவல் சாங்கி விமான நிலைய மாடியில் இருந்து விழுந்த வெளிநாட்டவர்

அதன் பின்னர், விபத்தை ஏற்படுத்தியதாக சொல்லப்படும் 21 வயதுமிக்க கார் ஓட்டுநர் கைது செய்யப்பட்டதாக தி ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் தெரிவித்துள்ளது.

சம்பவத்தில் காயமடைந்தவர்களுக்கு உதவி செய்ய ஓட்டுநர் வாகனத்தை நிறுத்தவில்லை எனவும், அதற்கு பதிலாக அவர் அங்கிருந்து தப்பிச் சென்றதாகவும் போலீசார் தெரிவித்தனர்.

கவனமின்றி வாகனம் ஓட்டியது, கடுமையான காயத்தை ஏற்படுத்தியது, செல்லுபடியாகும் ஓட்டுநர் உரிமம் மற்றும் காப்பீடு இல்லாமல் வாகனம் ஓட்டியது, உரிமையாளரின் அனுமதியின்றி வாகனத்தை எடுத்துவந்தது ஆகிய காரணங்களுக்காக இன்று (மார்ச். 25) குற்றஞ்சாட்டப்படும் என கூறப்பட்டுள்ளது.

விபத்துக்குப் பிறகு வாகனத்தை நிறுத்தத் தவறியது, காயமடைந்தவர்களுக்கு உதவி செய்யாதது போன்ற குற்றச்சாட்டுகளும் அவர் மீது சுமத்தப்படும்.

விபத்துகளில் சிக்கியவர்களுக்கும், காயமடைந்தவர்களுக்கும் மருத்துவ உதவி வழங்க ஆம்புலன்ஸை அழைப்பது போன்ற உதவிகளை வாகனமோட்டிகள் செய்ய வேண்டும் என்று போலீசார் தெரிவித்தனர்.

அவ்வாறு உதவி செய்யாமல் விட்டுச் செல்வது சட்டப்படி குற்றம் என்றும் காவல்துறை குறிப்பிட்டது.

விபத்துக்குப் பிறகு வாகனத்தை நிறுத்தாமல் சென்றாலோ, காயமடைந்தவர்களுக்கு உதவி செய்யவில்லை என்றாலோ S$1,000 வரை அபராதம், மூன்று மாதங்கள் வரை சிறை அல்லது இரண்டும் விதிக்கப்படலாம்.