உயிரிழப்பை ஏற்படுத்திய ஓட்டுநர்; சிறையில் அடைத்த சிங்கப்பூர் – 8 ஆண்டுகள் தடை

(Photo: iStock)

மோட்டார் சைக்கிள் ஓட்டிக்கு மரணத்தை ஏற்படுத்திய ஓட்டுநர் ஒருவருக்கு நேற்று (ஜூலை 22) 15 வார சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.

34 வயதான தியோ காய் சியாங் என்ற அந்த ஓட்டுநர் சாலையில் மற்றவர்களின் உயிரை மதிக்காமல் வாகனம் ஓட்டியதாக குற்றம் சாட்டப்பட்டது.

சட்டத்திற்கு புறம்பான உதவி; சிக்கிய வெளிநாட்டு ஓட்டுநர்!

இதனை அடுத்து குற்றத்தை ஒப்புக்கொண்ட அவருக்கு, எட்டு ஆண்டுகள் வாகனம் ஓட்டுவதற்கு தடையும் விதிக்கப்பட்டது.

2020ஆம் ஆண்டு நவம்பர் 1, அன்று காலை 11.30 மணியளவில், தியோ தனது காரை யுஷுன் ரிங் ரோட்டின் முதல் பாதையில் ஓட்டிக் கொண்டிருந்தார்.

பிளாக் 165, யுஷூன் ரிங் ரோட்டின் திறந்தவெளி கார் பார்க்கிங்கின் நுழைவாயிலுக்கு அவர் வலதுபுறமாகத் திரும்பினார்.

அதே நேரத்தில், உயிரிழந்த 50 வயதான திரு லியோங் சீ கியோங் மோட்டார் சைக்கிளில் நேராக யுஷுன் ரிங் ரோட்டில் எதிர் திசையில் சென்று கொண்டிருந்தார்.

திருப்புவதற்கு முன் எதிரே வரும் வாகனங்களைச் சரிபார்க்க தவறியதால், திரு லியோங்கின் மோட்டார் சைக்கிளில் அவரின் கார் மோதி விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் சிக்கிய திரு லியோங்குக்கு கடுமையான காயங்கள் ஏற்பட்டது, இதன் காரணமாக அன்றைய தினமே அவர் சிகிச்சை பலனின்றி மருத்துவமனையில் உயிரிழந்தார்.

போலீசார் மேற்கொண்ட அதிரடி சோதனை: சிக்கிய 300க்கும் மேற்பட்டோர்… என்ன நடந்தது?