போலீசார் மேற்கொண்ட அதிரடி சோதனை: சிக்கிய 300க்கும் மேற்பட்டோர்… என்ன நடந்தது?

சிங்கப்பூரில் போலீசார் மேற்கொண்ட அதிரடி சோதனையில் மொத்தம் 343 பேர் சிக்கினர், அவர்களிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

அதில் 236 ஆண்களும், 107 பெண்களும் அடங்குவர். அவர்கள் மோசடியில் ஈடுபட்ட சந்தேகத்தில் விசாரிக்கப்படுவதாக சிங்கப்பூர்க் காவல் படை (SPF) செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளது.

சிங்கப்பூரில் புதிதாக 6 பேருக்கு BA.2.75 வகை… MOH வெளியிட்ட ரிப்போர்ட்

இதில் பாதிக்கப்பட்டவர்கள் மொத்தம் S$6 மில்லியனுக்கும் அதிகமாக தொகையை இழந்துள்ளதாகவும் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

வர்த்தக விவகார துறை மற்றும் ஏழு காவல் பிரிவுகளினால் மேற்கொள்ளப்பட்ட இரண்டு வார சோதனை நடவடிக்கையின் போது அவர்கள் சிக்கினர்.

அதாவது கடந்த ஜூலை 8 மற்றும் ஜூலை 21 ஆம் தேதிகளுக்கு இடையில் அந்த அதிரடி சோதனை நடைபெற்றது.

இதில் இணைய காதல் மோசடிகள், அரசு மற்றும் சீன அதிகாரி போல ஆள்மாறாட்டம், மின்னணு வணிக மோசடிகள், வணிக மின்னஞ்சல் ஆள்மாறாட்டம் மோசடிகள், குறுஞ்செய்தி மோசடிகள், முதலீட்டு மோசடிகள், வேலைவாய்ப்பு மோசடிகள் மற்றும் கடன் மோசடிகள் ஆகியவை அடங்கும்.

சிங்கப்பூரில் பல இடங்களில் மேற்கொள்ளப்பட்ட அதிரடி சோதனை; 24 ஆடவர்கள் கைது