வாகனம் மோதி சிறுவன் மரணம் – ஓட்டுனருக்கு சிறை, அனைத்து வகுப்பு ஓட்டுநர் உரிமமும் ரத்து

driver jailed Punggol
Shin Min Daily News

சிங்கப்பூரில் சிறுவன் ஒருவருக்கு மரணத்தை ஏற்படுத்திய ஆடவருக்கு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

சிவப்பு விளக்கை மீறி வாகனத்தை ஓட்டியதில் 14 வயது சிறுவன் உயிரிழந்தார் என கூறப்பட்டுள்ளது.

சிங்கப்பூரில் “2024 புத்தாண்டு வாணவேடிக்கை” – 14 இடங்களில் கொண்டாட்டம்.. முழுத் தொகுப்பு

குற்றம் நிரூபணமானதால் இரண்டு வருட சிறைத்தண்டனை அவருக்கு விதிக்கப்பட்டுள்ளது.

25 வயதான ஃபர்ஹான் அகில் முகமத் அம்ரான் என்ற அவர், ஆபத்தான முறையில் வாகனம் ஓட்டி மரணத்தை ஏற்படுத்தியதாக டிசம்பர் 18 அன்று குற்றத்தை ஒப்புக்கொண்டார்.

மேலும் சிறையிலிருந்து வெளிவந்த பிறகு, 10 ஆண்டுகளுக்கு அவர் அனைத்து வகை ஓட்டுநர் உரிமத்தையும் வைத்திருக்கவோ அல்லது பெறவோ தகுதி இல்லை என்றும் சொல்லப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் பொங்கோலில் உள்ள சுமங் வாக் அருகே கடந்த 2022 அக்டோபர் 10 அன்று காலை 11.30 மணியளவில் நடந்தது.

பின்னர், அட்ரியல் சூ என்ற 14 வயது மாணவர் செங்காங் பொது மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார்.

அவருக்கு மண்டை எலும்பு முறிவு மற்றும் மூளைக் காயம் இருப்பதை மருத்துவர்கள் கண்டறிந்தனர்.

விபத்து நடந்த 23 நாட்களுக்குப் பிறகு அவர் இறந்தார் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

சிங்கப்பூர் சாங்கி விமான நிலையத்தில் 3 மணிநேரம் முன்னதாகவே உடைமைகளை வைக்க சிறப்பு அம்சம்