“ஓட்டுனர்களுக்கும் குடும்பம் இருக்கு”… நியாயமாக நடந்துகொள்ளுங்கள்; இனிமே இப்படி செய்யாதீங்க – வலுக்கும் குரல்கள்

(Photo: TODAY)

தாங்கள் எதிர்பார்த்த முழுக் கட்டணமும் கிடப்பதே இங்கு வாகனம் ஓட்டும் பல கேப் அல்லது தனியார் வாடகை ஓட்டுநருக்கு சவாலாக உள்ளது.

இதில் ஓட்டுனர்கள் பலர் தங்களுக்கு கமிஷன் கிடைக்கும் அதன் மூலம் நாம் நம் குடும்பத்துக்கு ஏதாவது கூடுதலாக செய்ய முடியும் என்ற நம்பிக்கையில் தான் வாழ்கின்றனர்.

சமீபத்தில், பயணி ஒருவர் $8.80 கட்டணத்திற்கு பதிலாக ஹாங் காங் டாலர் HK$10 (S$1.78) மட்டுமே ரொக்கமாகச் செலுத்தியுள்ளார். இது பற்றி நாம் கேள்வி பட்டிருப்போம்.

கிராப் ஓட்டுனரின் மகள் இது குறித்து வெள்ளிக்கிழமை (ஜூலை 8) தனது தனிப்பட்ட TikTok பதிவில் கூறியுள்ளார்.

Sarahremix09 என்ற கணக்கில் நடந்த சம்பவத்தைப் பற்றி அவர் பகிர்ந்து கொண்டார்.

“சிங்கப்பூரில் வேலை ரெடி… டிக்கெட்டை போடுங்க” ஏமாந்த 100 பேர் – தமிழக இளைஞர்கள் கண்ணீர்

வீடியோவில் கூறப்பட்டுள்ள தகவலின்படி; தன்னிடம் சிங்கப்பூர் டாலர்கள் ஏதும் இல்லை என்று கூறிய பயணி, காரை விட்டுச் செல்வதற்கு முன் அதற்குண்டான கட்டணத்தை செலுத்துவதாகவும் கூறினார்.

பயணம் முடிந்து அவர் செலுத்த வேண்டிய மொத்த கட்டணம் $8.80. அதற்கு அவர் HK$10 செலுத்தியுள்ளார். அதைப்பற்றி அறியாத ஓட்டுநர் தமக்கு கமிஷன் சேர்த்து கிடைத்துள்ளதாக மகிழ்ச்சியில் வாங்கிக்கொண்டார்.

ஆனால் இரண்டு நாட்டு பண மதிப்பின் மாற்று விகிதத்தை சரிபார்த்த பிறகு தான் உண்மை தெரியவந்தது. அவர் கொடுத்த HK$10 இன் மதிப்பு வெறும் S$1.78 என்பதை Sarahremix09 கண்டறிந்தார்.

“எனவே என் அப்பா சவாரி செய்து அவர் சம்பாதித்த பணம் $0.00” என்று வருத்தத்துடன் கூறியுள்ளார்.

‘தயவுசெய்து இதுபோன்று செய்யாதீர்கள்’ என்று ஓட்டுனரின் மகள் தன் அப்பா குறித்து பதிவிட்டார்.

அவர்களுக்கும் குடும்பம் இருக்கு, என்பதை மனதில் கொண்டு இதுபோன்று ஏமாற்ற நினைப்பவர்கள் அவர்களிடம் நியாயமாக நடந்துகொள்ள வேண்டும்.

கார் முன்னே விசித்திரமாக நடந்துகொண்ட பெண்… நம்பர் பிளேட்டை உடைத்து எறிந்து அட்டகாசம்; வீடியோ வைரல்