சிங்கப்பூரில் உள்ள சில கட்டிடங்கள் பச்சை, வெள்ளை வண்ணங்களில் ஒளிர்ந்தது ஏன்.?

Drug free Singapore pmlee
Pics: CNB Drug Free Singapore

சிங்கப்பூரில் நேற்றைய தினம் (ஜூன் 26)) Marina Bay Sands, Esplanade போன்ற கட்டிடங்களில் பச்சை, வெள்ளை நிறத்தில் விளக்குகள் ஒளிரிடப்பட்டிருந்தது.

உலகெங்கிலும் போதை புழக்கத்திற்கு எதிரான நாள் நேற்று (ஜூன் 26) அனுசரிக்கப்பட்டதையடுத்து, சிங்கப்பூரிலும் அதனை நினைவூட்டும் விதமாக பச்சை, வெள்ளை நிறத்தில் சில கட்டிடங்கள் ஒளிர்ந்தது.

சிங்கப்பூரில் ஒவ்வோரு ஆண்டும் #DrugFreeSG என்பதை நினைவு கூறும் விதமாக பச்சை, வெள்ளை நிறத்தில் விளக்குகள் ஒளிரிடப்படும் என பிரதமர் திரு லீ முகநூலில் குறிப்பிட்டுள்ளார்.

அடேங்கப்பா..சிங்கப்பூரை வியப்படைய செய்த மின்னல்கள்..அசத்திய புகைப்பட கலைஞர்கள்.!

சிங்கப்பூரின் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவுக்கு இது 50வது ஆண்டு நிறைவு என்றும், சிங்கப்பூரின் போதைப்பொருள் ஒழிப்புத் திட்டத்தின் மைல்கல்லாக இந்த ஆண்டு அமைவதாக பிரதமர் திரு லீ தெரிவித்தார்.

போதைப் புழக்கத்தை தடுப்பது பற்றி எடுத்துரைக்கும் நிகழ்ச்சிகளை நடத்துதல் மற்றும் சட்டத்தைப் மதித்து நடத்தல், அதை நடைமுறைப்படுத்துவதில் பயன்மிக்க நடவடிக்கைகளுக்கு ஏற்பாடு செய்தல், இளைஞர்களை அதிகம் ஈடுபடுத்துதல் போன்றவற்றை பிரிவு செய்து வருகிறது.

போதைப் புழக்கம் தனிநபரை மட்டுமல்லாமல் அவரது அன்புக்குரியவர்களையும், சமூகத்தினரையும் பாதிக்கும் என பிரதமர் திரு லீ குறிப்பிட்டுள்ளார்.

தேசிய பல்கலைக்கழகத்தில் பட்டமளிப்பு விழா; மெய்நிகர் விழாவில் அதிபர் பங்கேற்பு!