அடேங்கப்பா..சிங்கப்பூரை வியப்படைய செய்த மின்னல்கள்..அசத்திய புகைப்பட கலைஞர்கள்.!

Streaks lightning flashed skies
Pics: Jimmy Chin Photology/Simon Lim/Jason Lee

உலகில் அதிகமாக மின்னல் ஏற்படும் இடங்களில் ஒன்றாக சிங்கப்பூர் உள்ளது. சிங்கப்பூரில் ஆண்டுதோறும் சராசரியாக 176 நாட்களில் ஒரு முறையாவது மின்னல் ஏற்படுவது உண்டு. மின்னல்களை அதிகமாக ஏப்ரல், மே மற்றும் நவம்பர் மாதங்களில் காண முடியும்.

இந்நிலையில், சிங்கப்பூரில் கடந்த வியாழக்கிழமை (ஜூன் 24) அன்று பல்வேறு இடங்களில் வானில் பெரும் மின்னல்கள் ஏற்பட்டது.

Singapore Lightning Photographers எனும் முகநூல் குழுவில் வியாழக்கிழமை அன்று வானில் எடுக்கப்பட்ட ஏராளமான மின்னல் புகைப்படங்கள் வைரலாக பரவி வருகின்றன.

சிங்கப்பூரில் கிருமித்தொற்று காரணமாக 36வது மரணம்.!

இந்த மின்னல்கள் பார்ப்பதற்குச் சாதாரண மின்னல் போல் இல்லாமல், மிகவும் சக்திவாய்ந்த மின்னல் போல் தென்பட்டது.

வானத்தில் விரிசல்கள் ஏற்படுத்தியது போல் சில படங்களில் மின்னல்கள் தோன்றியது. வேறு சில படங்களில், கரு மேகங்களுக்கு இடையே மின்னல் ஏற்ப்பட்டது.

எந்த பகுதிகளில் மின்னல் வெட்டுகிறது என்பதை துல்லியமாக தெரிந்துகொள்ள myENV என்ற செயலியைப் பயன்படுத்தலாம்.

சிங்கப்பூரில் ஜூன் 24ம் தேதி எடுக்கப்பட்ட சில மின்னல் புகைப்படங்கள்:

Pic: Jason Lee/FB
Pic: Simon Lim/FB.
Pic: FreeMan Loke/FB
Pic: Kevin Law/FB
Pic: Kevin Law/FB
Pic: Jimmy Chin Photology/FB