சிங்கப்பூரில் கிருமித்தொற்று காரணமாக 36வது மரணம்.!

Singapore Covid19 36th death
Pic: Google Maps

கொரோனா கிருமித்தொற்று காரணமாக 84 வயது சிங்கப்பூர் பெண் ஒருவர் உயிரிழந்ததாக சுகாதார அமைச்சகம் (MOH) நேற்று (ஜூன் 26) தெரிவித்துள்ளது.

சிங்கப்பூரில் உள்ள புக்கிட் மேரா வியூ பிளாக் 115, 116 ஆகியவற்றில் இந்த மாதம் 15ம் தேதியன்று மேற்கொள்ளப்பட்ட சமூக கண்காணிப்பு கிருமித்தொற்றுப் பரிசோதனை மூலம் அந்த பெண்ணுக்கு கிருமித்தொற்று உறுதி செய்யப்பட்டது.

ராணுவ மருத்துவ நிறுவனத்தின் முதல் பெண் தளபதியாக இந்தியர் நியமனம்!

இறந்தவருக்கு, ஏற்கனவே புற்றுநோய், உயர் ரத்த அழுத்தம், hyperlipidaemia என்ற ரத்தத்தில் அதிகப்படியான கொழுப்பு ஆகியவை இருந்த காரணத்தால் அவருக்குத் தடுப்பூசி போடப்படவில்லை.

இதற்கு முன்னர், கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்ட 32 வயது இந்தோனேசிய இல்லப் பணிப்பெண் வசிக்கும் வீட்டில் அந்த 84 வயது பெண் வசித்து வந்துள்ளார். அந்த இந்தோனேசிய இல்லப் பணிப்பெண்ணுடன் தொடர்புள்ள கிருமித்தொற்று குழுமத்தில் மொத்தம் 8 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தேசியத் தொற்றுநோய் நிலையம் இறந்த பெண்ணின் குடும்பத்தைத் தொடர்புகொண்டு, ஆதரவு வழங்கிவருவதாக அமைச்சகம் குறிப்பிட்டுள்ளது.

சிங்கப்பூரில் COVID-19 கிருமித்தொற்று காரணமாக ஏற்பட்ட இறப்புகளின் மொத்த எண்ணிக்கை 36ஆக உயர்ந்துள்ளது.

சிங்கப்பூரில் வேனை தவறாக இயக்கி வடிகாலில் சாய்த்த 13 வயது சிறுமி.!