சிங்கப்பூரில் 5kg போதைப்பொருள்… அதன் மதிப்பு S$160,000 – 3 பேரை வளைத்து பிடித்த அதிகாரிகள்

CNB

சிங்கப்பூரில் போதைப்பொருள் தொடர்பான நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக சந்தேகத்தின்பேரில் மூன்று சிங்கப்பூரர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கடந்த பிப்ரவரி 21 அன்று அவர்கள் அனைவரும் கைது செய்யப்பட்டதாக மத்திய போதைப்பொருள் தடுப்புப் பிரிவு (CNB) நேற்று (பிப். 23) கூறியது.

வெளிநாட்டு ஊழியர்களை நிராகரிக்கிறதா சிங்கப்பூர்…?

இதில், Fernvale லிங்க் அருகே 60 வயது முதியவரை CNB அதிகாரிகள் கைது செய்தனர், அவரிடம் இருந்து 93 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

பின்னர், Fernvale Linkக்கு அருகில் நிறுத்தப்பட்டிருந்த வாகனத்திற்கு அவரை அழைத்துச் சென்ற அதிகாரிகள், வாகனத்தில் இருந்து மொத்தம் 42 கிராம் கஞ்சா மற்றும் 11 கிராம் “ஐஸ்” வகை போதைப்பொருளை கைப்பற்றினர்.

பின்னர் அதே பகுதியின் அருகாமையில் உள்ள குடியிருப்பில் சோதனை மேற்கொண்ட அதிகாரிகள், சுமார் 5,132 கிராம் கஞ்சா அடங்கிய பொட்டலங்கள் பலவற்றை பறிமுதல் செய்தனர், மேலும் 25 மற்றும் 62 வயதுடைய இரண்டு ஆண்கள் கைது செய்யப்பட்டனர்.

இதில் மொத்தமாக பறிமுதல் செய்யப்பட்ட போதைப்பொருட்களின் தெரு மதிப்பு S$160,000 என மதிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் விசாரணைகள் நடந்து வருவதாக CNB தெரிவித்துள்ளது.

தங்கும் விடுதி, கட்டுமான துறையில் உள்ள வெளிநாட்டு ஊழியர்களுக்கு ஏப்ரல் 1 முதல் இது கட்டாயம்!