புதுசு புதுசா யோசிக்குறாங்க! – கஞ்சாக் கடத்த புதிய வழிகளை நாடும் கடத்தல் காரர்கள்!

Central Narcotics Bureau

சிங்கப்பூரில் பல்வேறு விதமாக கஞ்சாப் புழக்கம் அதிகமாகி இருப்பதாக மத்திய போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவு தெரிவித்துள்ளது.கடத்தல்காரர்கள் போதைப்பொருட்களை தேங்காய், பழங்கள், கேக்குகள், மிட்டாய்கள் போன்றவற்றில் வைத்துப் பதுக்குகின்றனர்.

இதுபோன்ற புதிய வழிகளில் கஞ்சாவை கடத்தி வருவதை CNB கண்டறிந்து வருவதாக அதன் நிர்வாகத் துணை இயக்குனர் Sng Chern Hong ஊடகங்களிடம் தெரிவித்தார்.இந்தாண்டு பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சாவின் அளவு கடந்த ஆண்டை விட அதிகம் என்று கூறினார்.

கஞ்சா கடத்தல் மற்றும் புழக்கம் Covid-19 தொற்றுப் பரவலுக்கு முந்தைய நிலைக்குத் திரும்புவதாகவும் கூறினார்.Covid-19 வைரஸ் தொற்றின் போது நாடுகளுக்கிடையான போக்குவரத்தைத் தடுக்க எல்லைகள் மூடப்பட்டன.

இதனால் கடத்தல் செயல்பாடுகள் குறைந்தன.எல்லைகள் மீண்டும் திறக்கப்பட்டுள்ள நிலையில் போதைப்பொருள் புழக்கத்தைக் கட்டுப்படுத்துவதில் அதிகாரிகள் அதிகச் சவால்களை எதிர்நோக்குவதாக கூறப்படுகிறது.

இந்தாண்டின் தொடக்கத்தில் இருந்து தற்போது வரை சோதனைச்சாவடிகளில் 69 சிங்கப்பூரர்கள் பிடிபட்டதாகக் கூறப்படுகிறது.பிடிபட்டவர்களில் 60 சதவீதம் பேர் 30 வயதுக்கும் குறைவானவர்கள் என்று குறிப்பிடப்படுகிறது.போலியான தகவல்,சமூகவலைத் தளம் போன்றவற்றின் தாக்கத்தால் கஞ்சாப் புழக்கம் இளைஞர்களின் மனப்பான்மை மாறி வருவதாகக் கூறினார்.