சிங்கப்பூரில் அதிகாரிகளின் சோதனையின்போது தப்பிக்க முயன்ற நபர் கீழே விழுந்து மரணம்..!

Drugs seized in CNB raids; man dies in escape attempt
Drugs seized in CNB raids and man dies in escape attempt (Photo: Central Narcotics Bureau)

மத்திய போதை ஒழிப்புப் பிரிவு (CNB) அதிகாரிகள் நடத்திய தொடர் சோதனையில், சந்தேகத்திற்கிடமான போதைப்பொருள் குற்றவாளிகள் 6 பேர் கைது செய்யப்பட்டனர்.

மேலும், கிட்டத்தட்ட S$700,000 மதிப்புள்ள போதைப்பொருட்களும் அவர்களிடம் இருந்து சோதனைகளில் கைப்பற்றப்பட்டதாக CNB தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க : சிங்கப்பூர் வழியாக இந்தியா வந்த விமானத்தில் பயணிகள் பல மணி நேரம் பரிதவிப்பு..!

இதில் 63 வயதான மற்றொரு சந்தேகநபர், தப்பிக்க முயன்றபோது உயிரிழந்தார் என்றும் CNB செய்தி வெளியீட்டில் தெரிவித்துள்ளது.

அதாவது அதிகாரிகள் கட்டாயமாக குடியிருப்புக்குள் நுழைய வேண்டியிருந்தது. இருப்பினும், அதிகாரிகள் நுழைவதற்கு முன்பு, 63 வயதான அந்த நபர் சமையலறை ஜன்னலுக்கு வெளியே தப்பிக்க முயன்றபோது உயரத்தில் இருந்து விழுந்து உயிரிழந்தார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சோதனையில் பலவகையான போதைப்பொருட்கள் கைப்பற்றப்பட்டன. இது சுமார் 3,000 போதைப் பொருட்கள் பயன்படுத்துவோர் ஒரு வாரம் பயன்படுத்தப் போதுமானது என்று அதிகாரிகள் கூறியுள்ளனர்.

சன்செட் வே, புக்கிட் படோக் மற்றும் டான்ஜோங் பகர் ஆகிய இடங்களில் இந்த சோதனைகள் நடந்தன. மேலும், S$174,000 ரொக்கத்தையும் இந்த சோதனையில் அதிகாரிகள் கைப்பற்றினர்.

இந்த சந்தேக நபர்களின் போதைப்பொருள் நடவடிக்கைகள் மற்றும் உயரத்தில் இருந்து விழுந்த, 63 வயதுடைய நபர் மரணம் குறித்தும் விசாரணை நடந்து வருகிறது.

இதையும் படிங்க : கிருமித்தொற்று பாதித்த நபர்கள் சென்றுவந்த பொது இடங்களின் புதிய பட்டியல்..!

சிங்கப்பூர் செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்…