கிருமித்தொற்று பாதித்த நபர்கள் சென்றுவந்த பொது இடங்களின் புதிய பட்டியல்..!

places visited by Covid-19 cases while infectious
places visited by Covid-19 cases while infectious (Photo: TODAY )

சிங்கப்பூரில் COVID-19 கிருமித்தொற்று பாதித்த நபர்கள் சென்றுவந்த பொது இடங்களின் பட்டியலில் புதிதாக சில இடங்களைச் சுகாதார அமைச்சகம் (MOH) சேர்த்துள்ளது.

புதிய இடங்களின் பட்டியலில், கேளிக்கைப் பூங்காவும் இடம்பெற்றுள்ளதாக MOH தனது அறிவிப்பில் தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க : பாதசாரிகள் இடையே வாகனத்தை செலுத்தியவருக்கு சிறை – 4 ஆண்டுகள் வாகனம் ஓட்டத் தடை..!

புதிய இடங்களின் பட்டியல்:

8 செந்தோசா கேட்வேயில் உள்ள யுனிவர்சல் ஸ்டுடியோஸ் சிங்கப்பூர் – செப்டம்பர் 10ஆம் தேதி மதியம் 2.35 மணி முதல் இரவு 8.35 மணி வரை தொற்று பாதிக்கப்பட்ட நபர்கள் சென்றுள்ளனர்.

68 ஆர்ச்சர்ட் ரோட்டில் உள்ள பிளாசா சிங்கப்பூரா மாலில் உள்ள Nanjing Impressions உணவகம் – செப்டம்பர் 11ஆம் தேதி இரவு 7 மணி முதல் இரவு 7.50 மணி வரை தொற்று பாதிக்கப்பட்ட நபர்கள் சென்றுள்ளனர்.

குறிப்பிட்ட அந்த இடங்களில் இருந்தவர்கள், அங்கு சென்றுவந்த நாளிலிருந்து 14 நாட்களுக்கு அவர்களின் ஆரோக்கியத்தை உன்னிப்பாக கண்காணிக்க வேண்டும் என்று சுகாதார அமைச்சகம் (MOH) தெரிவித்துள்ளது.

கிருமித்தொற்று பாதிக்கப்பட்டவர்களுடன் நெருங்கிய தொடர்பில் இருந்தோருக்குத் தகவல் அளிக்கப்படும் என்றும் MOH குறிப்பிட்டுள்ளது.

குறிப்பிட்ட இடங்களைப் பொதுமக்கள் தவிர்க்கத் தேவையில்லை என்றும் MOH கூறியுள்ளது.

துப்புரவு மற்றும் கிருமி நீக்கம் குறித்த வழிகாட்டுதல்களை வழங்க தேசிய சுற்றுச்சூழல் நிறுவனம் பாதிக்கப்பட்ட இடங்களுக்கு வழங்கும் என்று தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க : சிங்கப்பூரில் முதலாளியை 100 முறை கத்தியால் குத்திய பணிப்பெண் – வழக்கு மறுவிசாரணை..!

சிங்கப்பூர் செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்…