மது போதையில் வாகனம் ஓட்டி பிடிபட்ட 12 பேர்

(Photo: TODAY)

மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டியதாக 12 பேர் மீது நாளை ஜூலை 27 அன்று குற்றம் சாட்டப்படும் என சொல்லப்பட்டுள்ளது.

அவர்கள் 23 முதல் 51 வயதுக்கு உட்பட்டவர்கள் என்றும், கடந்த பிப்ரவரி முதல் ஜூன் மாதத்திற்கு இடையில் அவர்கள் கைது செய்யப்பட்டனர் என்றும் போலீசார் குறிப்பிட்டுள்ளனர்.

கடனை அடைக்க வேண்டி தன் சிறுநீரகத்தை S$10,600க்கு விற்ற வெளிநாட்டு நபர் – வாங்கியவர் சிங்கப்பூரர்

கடந்த பிப்ரவரி மாதம் மது போதையில் இருந்த 24 வயதுமிக்க ஆடவர், நின்று இருந்த ஒரு வாகனம் மீது மோதி விபத்தை ஏற்படுத்தியதாக சொல்லப்பட்டுள்ளது.

அதே போல 35 வயதுமிக்க ஆடவர் மது போதையில் வாகனத்தின் ஓட்டுநர் இருக்கைலையே உறங்கியதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

மது போதையில் வாகனம் ஓட்டினால், S$2,000 முதல் S$10,000 வரை அபராதம் அல்லது 12 மாதங்கள் வரை சிறைத்தண்டனை அல்லது இரண்டும் விதிக்கப்படலாம்.

ஓட்டுநர் உரிமம் கூட ரத்து செய்யப்படலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

சிங்கப்பூரின் முக்கிய செய்திகளை உடனே அறிய Tamil Micset வாட்ஸ்ஆப் குழுவில் இணையுங்கள் – கிளிக் செய்யுங்கள்

சிங்கப்பூர் சாலைகளில் செல்லும் நீங்கள் இந்த தவறை ஒருபோதும் செய்யாதீர்கள்: மீறிய வெளிநாட்டு ஊழியருக்கு S$4,800 அபராதம்