சிங்கப்பூர் சாலைகளில் செல்லும் நீங்கள் இந்த தவறை ஒருபோதும் செய்யாதீர்கள்: மீறிய வெளிநாட்டு ஊழியருக்கு S$4,800 அபராதம்

man fined feeding spore
Shin Min News Daily

புறாக்களுக்கு உணவளித்த குற்றத்திற்காக 67 வயதான இந்திய ஊழியருக்கு கடந்த ஜூலை 21 அன்று S$4,800 அபராதம் விதிக்கப்பட்டது.

எழுத்துப்பூர்வ அனுமதியின்றி, சிங்கப்பூரில் வனவிலங்கு சட்டத்தின் கீழ் பறவைகளுக்கு உணவளிப்பது சட்டப்படி குற்றமாகும்.

வெளிநாட்டு ஊழியர்களுக்கு ஆதரவாக களத்தில் 40க்கும் மேற்பட்ட அமைப்புகள்.. “ஊழியர்களை லாரியில் ஏற்றக்கூடாது” – பிரதமருக்கு மனு

Aljunied Crescentஇல், V ராஜேந்திரன் என்ற அந்த ஊழியர், பறவைகளுக்கு நடைபாதை மற்றும் புல் விளிம்பில் ரொட்டித் துண்டுகளை எறிந்து உணவளித்ததை தேசிய பூங்கா வாரிய (NParks) அமலாக்க அதிகாரிகள் கண்டனர்.

“இது சட்டப்படி குற்றம் அவ்வாறு செய்யக்கூடாது” என்று அதிகாரிகள் எடுத்து சொல்லியும், அவர் குறைந்தது 15 முறை பறவைகளுக்கு உணவளித்ததாக சொல்லப்பட்டுள்ளது.

நீதிமன்ற ஆவணங்களின் படி, 2022 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 26 முதல் டிசம்பர் 30 வரை அவர் பறவைகளுக்கு உணவளித்தது தெரியவந்தது.

வனவிலங்கு சட்டத்தின் கீழ் நான்கு குற்றச்சாட்டுகளை அவர் ஒப்புக்கொண்டார், மேலும் 12 குற்றச்சாட்டுகள் கவனத்தில் எடுத்து கொள்ளப்பட்டன.

சட்டத்தை மீறி உணவளித்து பிடிபடும் நபருக்கு S$5,000 வரை அபராதம் விதிக்கபடலாம்.

அதே குற்றத்தை மீண்டும் மீண்டும் செய்யும் குற்றவாளிகளுக்கு S$10,000 வரை அபராதம் விதிக்கபடலாம்.

சிங்கப்பூரின் முக்கிய செய்திகளை உடனே அறிய Tamil Micset வாட்ஸ்ஆப் குழுவில் இணையுங்கள் – கிளிக் செய்யுங்கள்

$50 கள்ள நோட்டு அடித்து சிக்கிய வெளிநாட்டு ஊழியர் – தங்கும் விடுதி கடையில் பணத்தை மாற்ற முயன்றபோது சிக்கிய கதை