வெளிநாட்டு ஊழியர்களுக்கு ஆதரவாக களத்தில் 40க்கும் மேற்பட்ட அமைப்புகள்.. “ஊழியர்களை லாரியில் ஏற்றக்கூடாது” – பிரதமருக்கு மனு

foreign workers lorry accidents
(Photo: 8world reader)

வெளிநாட்டு ஊழியர்களை லாரிகளில் ஏற்றிச் செல்வதை தடைசெய்யவும், அதே போல அவர்களை ஏற்றி செல்லும் வாகனங்களில் இருக்கைகள் மற்றும் சீட் பெல்ட் இருப்பதை கட்டாயமாக்கவும் காலக்கெடு நிர்ணயிக்க வேண்டும் என கோரிக்கைகள் எழுந்துள்ளன.

இந்த கோரிக்கையை, புலம்பெயர்ந்த ஊழியர்கள் நலக் குழுக்கள் உட்பட 40 க்கும் மேற்பட்ட அமைப்புகள் மற்றும் தனிநபர்கள் முன்வைத்துள்ளனர்.

$50 கள்ள நோட்டு அடித்து சிக்கிய வெளிநாட்டு ஊழியர் – தங்கும் விடுதி கடையில் பணத்தை மாற்ற முயன்றபோது சிக்கிய கதை

கடந்த ஜூலை 18 மற்றும் 19 ஆகிய தேதிகளில் ஊழியர்களை ஏற்றிச் செல்லும் லாரிகள் சம்பந்தப்பட்ட இரண்டு விபத்துக்கள் ஏற்பட்டன. அது குறித்த செய்திகளை நாம் அப்போது வெளியிட்டோம்.

அந்த விபத்தில் வெளிநாட்டு ஊழியர்கள் உட்பட 37 பேர் காயமடைந்தனர். இதை அடுத்து, ஊழியர்களுக்கு பாதுகாப்பான போக்குவரத்து வசதிகளை ஏற்படுத்தி தரக்கோரி கோரிக்கைகள் எழுந்துள்ளன.

பிரதம மந்திரி லீ சியென் லூங், தற்காலிக போக்குவரத்து அமைச்சர் சீ ஹாங் டாட் மற்றும் மூத்த போக்குவரத்து அமைச்சர் எமி கோர் ஆகியோருக்கு இது தொடர்பாக கோரிக்கை மனு ஆன்லைனில் அனுப்பப்பட்டுள்ளது.

மேலும், இதற்கு ஆதரவாக புலம்பெயர்ந்தோர் ஆதரவு கூட்டணி, மனிதாபிமான அமைப்பு, எம்.பி.க்கள் மற்றும் தனிநபர்கள் இணைந்து கையெழுத்திட்டனர்.

அனைவருக்கும் ஒரே மாதிரியான போக்குவரத்து இருக்க வேண்டும் என்பது அவர்கள் அனைவரது வாதம்.

இந்த விதிவிலக்கு பாரபட்சமானது என்றும் ஏற்றுக்கொள்ள முடியாதது என்றும் புலம்பெயர்ந்த ஊழியர்கள் உரிமைகள் குழுவின் (TWC2) செயற்குழு உறுப்பினர் டாக்டர் ஸ்டெபானி சோக் கூறினார்.

கார், லாரி மோதி கடும் விபத்து: 11 பேர் மருத்துவமனையில் அனுமதி

மூன்று லாரிகள் மோதி விபத்து: 20க்கும் மேற்பட்ட வெளிநாட்டு ஊழியர்கள் மருத்துவனையில்…

சிங்கப்பூரின் முக்கிய செய்திகளை உடனே அறிய Tamil Micset வாட்ஸ்ஆப் குழுவில் இணையுங்கள் – கிளிக் செய்யுங்கள்

தேசிய தினத்தை முன்னிட்டு Singapore Pools நடந்தும் மெகா ஜாக்பாட் குலுக்கல்