துபாயில் இருந்து சென்னைக்கு இப்படியும் தங்கத்தைக் கடத்தி வந்த பயணி… அதிகாரிகளுக்கு காத்திருந்த அதிர்ச்சி (வைரலாகும் வீடியோ)

Photo: Chennai Customs

ஏப்ரல் 20- ஆம் தேதி அன்று எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமான EK-546 என்ற விமானம் மூலம் துபாயில் இருந்து சென்னை சர்வதேச விமான நிலையத்திற்கு வந்த பயணி ஒருவரை சந்தேகத்தின் அடிப்படையில் பிடித்து சென்னை மண்டல சுங்கத்துறை அதிகாரிகள் (Chennai Customs Officers) தீவிர சோதனை மேற்கொண்டனர்.

ஏப்.23- ஆம் தேதி ஸ்ரீ சிவன் கோயிலில் குருபெயர்ச்சி விழா நடைபெறும் என அறிவிப்பு!

அப்போது, அந்த பயணி தனது கால் மூட்டுப் பகுதிகளில் காயமடைந்தது போல் காண்பிக்க துணியால் சுற்றி அதற்குள் தங்கத்தைக் கடத்திக் கொண்டு வந்திருப்பது தெரிய வந்துள்ளது. இதையடுத்து, அந்த பயணியின் பேண்ட்டை கழற்றுமாறு கூறி அதிகாரிகள், தங்கத்தை துணியில் வைத்துக் கடத்தி வந்ததையும் பறிமுதல் செய்துள்ளனர்.

அதில் 24 கேரட் சுத்தமான தங்க கட்டிகள் இருந்துள்ளது. அவற்றின் மொத்த எடை 1,128 கிராம் என்றும், அதன் மொத்த மதிப்பு 60.58 லட்சம் ரூபாய் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சுங்கத்துறை சட்டம் 1962- ன் கீழ் கடத்தல் தங்கத்தைப் பறிமுதல் செய்த அதிகாரிகள், சம்மந்தப்பட்ட பயணியையும் கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

“இஸ்தானா பொதுமக்களுக்காகத் திறக்கப்படும் என அறிவிப்பு”- காரணம் என்ன?

இது குறித்த வீடியோவை சென்னை மண்டல சுங்கத்துறை தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள நிலையில், அவை தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.