சிங்கப்பூர் ஓவர் ஷிப்ட் வேலையில் இவ்வளவு கொடூரங்கள் நடக்கிறதா? பல பணியாளர்களின் உயிர்கள் பறிபோகும் அபாயம்!

Photo: Getty

கொரோனாவால் உண்டான நெருக்கடி, அதிகரிக்கும் விலைவாசி போன்ற காரணத்தினால் பணியாளர்கள் ஓவர் ஷிப்ட் வேலை பார்க்க வேண்டி உள்ளது. பணியை முடிக்க வேண்டும் என்று மட்டுமே கவனத்தில் கொள்ளும் நிறுவனங்கள், பணியாளர்கள் பாதுகாப்பில் எவ்வித கவனமும் செலுத்துவதில்லை.

ஊழியர்கள் பற்றாக்குறை நிலவும் இந்த நேரத்தில், பணிகளையும் முடிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. அதற்காக இருக்கின்ற ஊழியர்களை வைத்து மொத்தமாக முடித்து விடலாம் என சில நிறுவனங்கள் கருதுகின்றன.

காலை 7.30 மணிக்குத் தொடங்கும் வேலை, மாலை 6 மணி அளவில் முடிய வேண்டும். ஆனால் சில நேரங்களில் இரவு 10,11 மணி வரையும் தொடர்கிறது.

சிங்கப்பூரில் இந்த ஆண்டு ஜனவரி முதல் தற்போதுவரை 20 பணியாளர்கள் வெளி செய்யும் இடத்திலேயே மரணம் அடைந்துள்ளனர்.

2016 ஜனவரி முதல் ஏப்ரல் வரையிலான மாதங்களுக்குப் பின்னர் இதுதான் அதிக எண்ணிக்கையிலான மரணமாகும். இதில் பத்து மரணங்கள் ஏப்ரலில் மட்டும் ஏற்பட்டன.

வேலையிட விபத்துகளைத் தவிர்க்க, மனிதவள அமைச்சகம் 1,700 சோதனைகளை நடத்தி உள்ளது. அவை மூன்று மாத கால இடைவெளியில் மேற்கொள்ளப்பட்டன.

இதனையடுத்து 15 வேலை உத்தரவுகள், 700 எச்சரிக்கைகள், 150 அபராதங்கள் விதிக்கப்பட்டன.

இந்த ஆண்டு பணியிடத்தில் நடந்த பெரும்பாலான மரணங்கள் அனுபவம் இல்லாததால் நிகழவில்லை.

அந்த விபத்துகளில் மரணம் அடைந்தனர் அனைவரும் குறைந்தது 4 ஆண்டு வேலை அனுபவம் உள்ளவர்கள்.

போதுமான பாதுகாப்பு நடவடிக்கைகள் இல்லாதது, முறையான வேலை நடைமுறைகளை கடைபிடிக்காதது, ஊழியர்கள் மத்தியில் வேலையிட பாதுகாப்பு பற்றிய போதிய விழிப்புணர்வு இல்லாதது போன்றவற்றால் இந்த மரணங்கள் நிகழ்ந்தன.