லாரியில் கடத்தல் வேலை: உதவிய ஊழியர் – சிங்கப்பூரருக்கு சிறை

duty-unpaid-cigarettes-smuggle-singapore-
Singapore Customs

சுங்கவரி செலுத்தப்படாத சிகரெட்டுகளை லாரியில் கடத்திய குற்றச்சாட்டில் சிங்கப்பூர் நபருக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

இதில் முஹம்மது ரிபாயி பின் மஸ்லான் என்ற 24 வயது சிங்கப்பூரருக்கு 26 மாத சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

கூடுதலாக, முறைகேடான பொருட்களை வைத்திருந்ததற்காகவும் பயன்படுத்தியதற்காகவும் அவருக்கு ஒரு மாதம் மற்றும் 18 நாட்கள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.

சிங்கப்பூரில் அதிகரிக்கும் தொற்று… மீண்டும் தடுப்பூசி – ஏற்கனவே 4,000 பேர் போட்டாங்க

அதிகாரிகள் லாரியில் சோதனை நடத்தியதில் சுங்கவரி செலுத்தப்படாத 1,420 சிகரெட் அட்டை பெட்டிகளை கண்டுபிடித்தனர்.

இதனை அடுத்து அனைத்து வரி செலுத்தப்படாத சிகரெட்டுகள் மற்றும் லாரியும் பறிமுதல் செய்யப்பட்டது.

இதில் ஏய்ப்பு செய்யப்பட்ட மொத்த வரி மற்றும் சரக்கு, சேவை வரி (GST) தொகை முறையே S$194,020 மற்றும் S$14,570 ஆகும் எனவும் கூறப்பட்டுள்ளது.

இந்தோனேசிய ஊழியர் ஒருவரும் வரி செலுத்தப்படாத சிகரெட்டுகளை கடத்தவும், சேகரிக்கவும் மற்றும் வழங்கவும் உதவியதற்காக பிடிபட்டார். அவரிடம் விசாரணை நடைபெறுகிறது.

சிங்கப்பூரில் மீண்டும் முகக்கவசம், கட்டுப்பாடா? – சுகாதார அமைச்சர் சொல்வதென்ன?