அடுக்குமாடி வீட்டில் கடுமையான தீ விபத்து: இ-பைக்கின் பேட்டரியில் பற்றிய தீ – பத்திரமாக வெளியேறிய 30 பேர்

e-bike-battery-fire-beo-crescent
SCDF

பியோ கிரசென்ட்டில் உள்ள அடுக்குமாடி வீட்டில் இன்று வெள்ளிக்கிழமை (ஏப். 8) காலை இ-பைக்கின் பேட்டரியில் தீ பற்றியதாக கூறப்பட்டுள்ளது.

இன்று காலை 8:15 மணியளவில் பிளாக் 38 Beo Crescent-ல் ஏற்பட்ட தீ விபத்து குறித்து தகவல் கிடைத்ததாக சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை (SCDF) ஃபேஸ்புக் பதிவில் கூறியது.

வெளிநாட்டு ஊழியர் வறுமையில் இருந்தபோது S$1,000 கொடுத்து உதவிய சிங்கப்பூர் பெண்மணி – 11 ஆண்டுகள் கடந்தும் பெண்மணியை தேடிவரும் ஊழியர்!

SCDF சம்பவ இடத்திற்கு வந்தபோது, ​​10வது மாடியில் உள்ள வீட்டில் தீ கொழுந்துவிட்டு எரிவதையும், அடர்ந்த கறுப்பு புகை வீட்டில் வெளியேறுவதையும் அதிகாரிகள் கண்டனர்.

சுவாசக் கருவிகளை அணிந்திருந்த SCDF தீயணைப்பு வீரர்கள் தண்ணீர் ஜெட் கருவி மூலம் தீயை அணைத்தனர்.

SCDF வருவதற்கு முன்பு, அக்கம்பக்கத்து வீடுகளை சேர்ந்த 30 பேர் சுயமாக வெளியேறினர்.

மேலும் இதில் யாருக்கும் காயங்கள் எதுவும் ஏற்படவில்லை.

இ-பைக்கின் பேட்டரிகளை நீண்ட நேரம் சார்ஜ் செய்யவேண்டாம் என்றும், முறையான அங்கீகாரம் இல்லாத பேட்டரிகளை பயன்படுத்தவேண்டாம் என்றும் SCDF அறிவுறுத்தியுள்ளது.

பூன் லே டிரைவ் ஆயுதம் ஏந்திய தாக்குதல்: சம்பவ இடத்திற்கு அழைத்துச் செல்லப்பட்ட சந்தேக நபர்கள்