வெளிநாட்டு ஊழியர் வறுமையில் இருந்தபோது S$1,000 கொடுத்து உதவிய சிங்கப்பூர் பெண்மணி – 11 ஆண்டுகள் கடந்தும் பெண்மணியை தேடிவரும் ஊழியர்!

foreign worker-benefactor
Photo: Bloomberg

வெளிநாட்டு ஊழியர் ஒரு காலத்தில் பணம் இல்லாமல் கஷ்டத்தில் தவித்தபோது உதவிய பெண்மணி ஒருவரை அவர் தேடி வருகிறார்.

சுமார் 11 ஆண்டுகளுக்கு முன்னர் பொருளாதார சிக்கலில் இருந்த ஊழியருக்கு அந்த பெண்மணி S$1,000 கடனாகக் கொடுத்து உதவியுள்ளார்.

8World News உடனான ஒரு நேர்காணலில் இந்த செய்தியை பகிர்ந்து கொண்ட Fan Zhong Hua என்ற அவர், தன் சொந்த நாட்டுக்கு திரும்பிய பிறகு அவருடனான தொடர்பை இழந்துவிட்டதாகப் பகிர்ந்து கொண்டார்.

பூன் லே டிரைவ் ஆயுதம் ஏந்திய தாக்குதல்: சம்பவ இடத்திற்கு அழைத்துச் செல்லப்பட்ட சந்தேக நபர்கள்

நீங்கா நினைவு

ஆனாலும், அவரின் உதவி மற்றும் அவரது அன்பான செயல் ஊழியரின் மனதில் ஆழமாக பதிந்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

37 வயதான Fan சீன நாட்டை சேர்ந்தவர். பெண்மணி அப்போது செய்த உதவிக்கு தற்போது அவர் திருப்பிச் செலுத்த விரும்புவதாக கூறியுள்ளார்.

மேலும், சிங்கப்பூரில் உள்ள அந்த கொடை வள்ளலுடன் அவர் மீண்டும் சந்திக்க பொதுமக்கள் உதவுவார்கள் என்று நம்புவதாகவும் Fan குறிப்பிட்டுள்ளார்.

ஊழியரின் சிங்கப்பூர் வருகை

ஊழியர் முதன்முதலில் 2006ஆம் ஆண்டு தனது மனைவியுடன் சிங்கப்பூருக்கு வந்திருந்தார்.

அப்போது ஊழியர் பகுதி நேரமாக வேலை செய்து படித்தும் வந்தார். அவர் துவாஸில் அமைந்துள்ள கப்பல் கட்டும் தளத்தில் பகல் வேளைகளில் பணிபுரிந்தார். இரவு நேரங்களில் படித்தும் வந்தார்.

இங் சூனின் (Eng Soon) ஊழியர்கள் தங்கியிருந்த தங்குமிடத்தில், அந்த நிறுவனத்தில் எழுத்தராகப் பணிபுரிந்த லி ஜீ என்ற அந்த பெண்மணியை ஊழியர் சந்தித்தார்.

லீ, 1961ஆம் ஆண்டு பிறந்தார், அதாவது தற்போது அவருக்கு 61 வயது இருக்கும் என்று ஊழியர் கூறினார்.

உட்லண்ட்ஸில் தனியாக வசித்து வந்த அந்த பெண்மணியை வெள்ளை முடி கொண்ட “ஆண்ட்டி” என்று அவர் விவரித்தார். மேலும், லி பின்னர் செம்பவாங்கில் உள்ள கப்பல் கட்டும் தளத்திற்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டதாகவும் fan கூறினார்.

நீங்களும் உதவலாம்

பெண்மணியிடம் கஷ்ட காலத்தில் உதவி பெற்ற ஊழியர், இப்போது பொருளாதார ரீதியாக நன்றாக உள்ளார்.

மேலும், லியைக் கண்டுபிடித்து அவருக்கு S$1,000 திருப்பிச் செலுத்தி, அவர் செய்த பேருதவிக்கு தனிப்பட்ட முறையில் நன்றி சொல்ல வேண்டும் என்றும் நம்பிகையில் உள்ளார் அவர்.

லி பற்றி ஏதேனும் தகவல் தெரிந்தால், நீங்கள் 8world ஐ 8288 8223 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் அல்லது Facebook மூலம் செய்தி அனுப்பலாம்.

முகக்கவசம் அணிவதற்கான புதிய விதிகள்: மீறுவோர் மீது நடவடிக்கை உறுதி – உஷார்