முகக்கவசம் அணிவதற்கான புதிய விதிகள்: மீறுவோர் மீது நடவடிக்கை உறுதி – உஷார்

ஊழியர் விளையாட்டாக செய்த காரியம் அவருக்கே வினையாய் போனது - சிறை விதிப்பு
(PHOTO: Mothership)

சிங்கப்பூரில் நடப்பில் இருக்கும் புதிய பாதுகாப்பு நடவடிக்கைகளை கடைப்பிடிக்காதவர்களுக்கு எதிரான அமலாக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று நீடித்த நிலைத்தன்மை மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சகம் (MSE) தெரிவித்துள்ளது.

அதாவது விதிகளை மீறுபவர்களின் சூழ்நிலைகளைப் பொறுத்து நியாயமான முறையில் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று MSE குறிப்பிட்டுள்ளது.

சிங்கப்பூரின் 2023ஆம் ஆண்டுக்கான “பொது விடுமுறை” நாட்களின் பட்டியல் வெளியீடு!

கடந்த மார்ச் 29 அன்று சிங்கப்பூரில் பாதுகாப்பு நடவடிக்கைகள் எளிமையாக்கப்பட்டன. அதில் ஒரு பகுதியாக, வெளி இடங்களில் முகக்கவசம் அணிவது அவரவர் விருப்பமாக மாறியது.

இருப்பினும், உட்புறங்களில் முகக்கவசம் அணிவது தொடர்ந்து நடப்பில் இருக்கும் என்பதை நினைவில் கொள்ள வேண்டும். இது தொடர்ந்து அதிகாரிகளால் கண்காணிக்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.

முகக்கவசம் கட்டாயம் அணிய வேண்டிய உள் இடங்கள்:

  • பேருந்து மற்றும் ரயில்கள்
  • உணவங்காடி நிலையங்கள்
  • காப்பிக் கடைகள்
  • கடைத்தொகுதிகள்
  • ஈரச்சந்தைகள்
  • சில்லறைக் கடைகள், கடைவீடுகள்
  • அலுவலகக் கட்டடங்கள்
  • நூலகங்கள் மற்றும் வகுப்பறைகள்
  • மின்தூக்கிகள் (Lift)

முகக்கவசம் அணிய கட்டாயமில்லாத வெளி இடங்கள்: (விருப்பப்பட்டால் அணியலாம்)

  • பூங்காக்கள்
  • திடல்கள்
  • இயற்கை வனப் பாதைகள்
  • திறந்தவெளி நடைபாதைகள்
  • மேம்பாலங்கள்
  • பேருந்து நிறுத்தங்கள்
  • ஐந்தடி பாதைகள்
  • வெற்றுத்தளங்கள்
  • சில்லறைக் கடை நடைபாதைகள்
  • இயற்கை வெளிச்சம் நிறைந்த பேருந்து நிலையங்கள்

சிங்கப்பூருக்கு குடிபெயர நடிகர் “அஜித் குமார்” திட்டம் – அதிர்ச்சியில் ரசிகர்கள்!