E Pass வேலை அனுமதி விண்ணப்பங்கள்… 43 சதவீத ஊழியர்களுக்கு 3 முறை அனுமதி

E Pass applications mom 43 சதவீத ஊழியர்களுக்கு 3 முறை அனுமதி கிடைத்துள்ளது

E Pass வேலை அனுமதி விண்ணப்பங்களில் சம்பளம் மற்றும் COMPASS புள்ளிகள் போன்ற கட்டுப்பாடுகள் வந்த பிறகு அதற்கான அனுமதி கிடைக்குமா கிடைக்காதா என்ற எண்ணம் பலருக்கு இருக்கிறது.

இந்த கட்டுப்பாடுகள் செப். 1 ஆம் தேதி முதல் நடப்புக்கு வந்துள்ளது குறித்து நாம் முன்னர் செய்தி வெளியிட்டு இருந்தோம்.

இந்திய ஊழியர் உட்பட இரு வெளிநாட்டு கட்டுமான ஊழியர்கள் விபத்தில் சிக்கி மரணம்

இந்நிலையில், பெரும்பாலான E Pass வேலை அனுமதி விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டு அனுமதி கொடுக்கப்படுவதாக மனிதவள அமைச்சர் டான் சீ லெங் கூறியுள்ளார்.

E Pass வேலை அனுமதி குறித்து நாடாளுமன்றத்தில் கேள்வி எழுந்தது, அதற்கான பதிலை அவர் எழுத்துப்பூர்வமாக அறிவித்தார்.

வேலை அனுமதிக்காக விண்ணப்பித்தவர்களின் புள்ளிவிவரங்களை அவர் வெளியிட்டுள்ளார்.

புள்ளிவிவரம்

ஒரு முறை கூட அனுமதி பெறாத பட்டியலில் 44 சதவீத ஊழியர்கள் இருக்கின்றனர்.

இருப்பினும், 3 முறை அனுமதி பெற்ற பட்டியலில் 43 சதவீத ஊழியர்கள் உள்ளனர்.

4 அல்லது அதற்கு மேல் 13 சதவீத ஊழியர்களுக்கு அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது.

சிங்கப்பூரில் புதிய வேலை அனுமதிக்கான விண்ணப்பங்கள்… செப். 1 முதல் இது கட்டாயம்

டோட்டோ லாட்டரியில் இந்தியருக்கு 1 கோடி பரிசா? லிட்டில் இந்தியாவில் வாங்கப்பட்ட டிக்கெட்