சட்டத்திற்கு புறம்பான சுமார் S$700,000 மதிப்புள்ள பொருட்கள் பறிமுதல் – 3 பேர் கைது

HSA

போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கையின் போது கடந்த பிப்ரவரி 16 அன்று மூன்று சிங்கப்பூரர்கள் கைது செய்யப்பட்டனர்.

இதனை மத்திய போதைப்பொருள் தடுப்புப் பிரிவு (CNB) மற்றும் சுகாதார அறிவியல் ஆணையம் (HSA) ஆகியவை கூட்டு செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளன.

பொடுபோக்காக சாலையை கடந்த பெண்ணை மோதி தூக்கிய கார்… சாலையில் பறந்து விழுந்த பெண் (வீடியோ)

அதோடு மட்டுமல்லாமல், சுமார் S$700,000 மதிப்புள்ள மின்-வேப்பரைசர்கள் மற்றும் பொருட்கள் கைப்பற்றப்பட்டன.

கடந்த பிப்ரவரி 16 அன்று, அப்பர் புக்கிட் திமாவுக்கு அருகில் 30 வயது மற்றும் 32 வயது ஆடவர் இருவரை CNB அதிகாரிகள் கைது செய்தனர்.

இருவரும் அதற்கு அருகாமையில் உள்ள ஒரு வீட்டுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர், அங்கு 37 வயதுடைய ஆடவர் ஒருவரும் கைது செய்யப்பட்டார்.

அந்த வீட்டிலிருந்து மொத்தம் 2 கிராம் ‘ஐஸ்’ வகை போதைப்பொருள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டன.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களின் சட்டவிரோத நடவடிக்கைகள் தொடர்பிலான விசாரணைகள் தொடர்ந்து நடந்து வருகின்றன.

தேடப்பட்டு வந்த ஊழியர்… சிங்கப்பூரில் இருந்து திருச்சி வந்தபோது தூக்கிய போலீஸ்!