ஆசியான் உள்ளிட்ட நாடுகளில் பயணக் கட்டுப்பாடுகளை குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் – பிரதமர் லீ

ease travel restrictions PM Lee
ASEAN and Australia, New Zealand should work to ease travel restrictions, says PM Lee (Photo: MCI)

எல்லைக் கட்டுப்பாடுகளை தளர்த்துவதற்காக தென்கிழக்கு ஆசிய நாடுகளின் கூட்டமைப்பு (ஆசியான்) உடன் இணைந்து பணியாற்றுமாறு ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து ஆகிய நாடுகளுக்கு பிரதமர் லீ சியென் லூங் (நவம்பர் 14) அழைப்பு விடுத்தார்.

இது பொருளாதார நடவடிக்கைகளை மீண்டும் தொடங்குவதற்கு உதவும் என்றும் அவர் கூறியுள்ளார்.

குடியிருப்புக் கட்டடத்தில் தீ விபத்து: தீக்காயங்களுடன் ஒருவர் மருத்துவமனையில் அனுமதி.

எல்லைகளை பாதுகாப்பான முறையில் மீண்டும் திறப்பது மற்றும் பொருளாதார நடவடிக்கைகளை மீண்டும் தொடங்குவதற்கும் இது உதவும் என்றும் இரண்டாவது ஆசியான்-ஆஸ்திரேலியா உச்சி மாநாட்டில் திரு லீ கூறினார்.

ஆஸ்திரேலியாவிலிருந்து வரும் பயணிகளை அனுமதிக்க சிங்கப்பூர் தனது எல்லைக் கட்டுப்பாடுகளை நீக்கியுள்ளதாகக் குறிப்பிட்ட அவர், ஆஸ்திரேலியாவும் தனது சொந்த எல்லைக் கட்டுப்பாடுகளை எளிதாக்கும் என்று நம்புவதாகவும் குறிப்பிட்டார்.

மேலும், ஆசியான்-நியூசிலாந்து தலைவர்கள் உச்சிமாநாட்டின் போது, இரு தரப்பினரும் தற்போதைய பயணக் கட்டுப்பாடுகளை படிப்படியாகவும் பாதுகாப்பாகவும் நீக்க வேண்டும் என்று திரு லீ குறிப்பிட்டார்.

சிங்கப்பூர் தோ பாயோவில் பேருந்தின் கீழே சிக்கிய ஆடவர்.

சிங்கப்பூர் செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்…