கட்டுப்பாட்டை மீறி சாலை தடுப்பில் சீறிப்பாய்ந்த கார் (காணொளி) – 3 பேர் மருத்துவமனையில்…

East Coast Parkway vehicle flips
East Coast Parkway vehicle flips (PHOTO: SG Road Vigilante/FB)

ஈஸ்ட் கோஸ்ட் பார்க்வேயில் (East Coast Parkway – ECP) நேற்று சனிக்கிழமை (ஜனவரி 9) அதிகாலையில் ஏற்பட்ட வாகன விபத்துக்குப் பின்னர் மூன்று பேர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

நேற்று அதிகாலை 2 மணியளவில் பெடோக் சவுத் (Bedok South) வெளியே, மரீனா கோஸ்டல் அதிவேக நெடுஞ்சாலை (MCE) நோக்கி செல்லும் ECPயில் ஏற்பட்ட விபத்து குறித்து தகவல் கிடைத்ததாக சிங்கப்பூர் குடிமை பாதுகாப்பு படை (SCDF) தெரிவித்துள்ளது.

கோவிட் -19: 234 ஊழியர்களுக்கு கிருமித்தொற்று சிறப்பு சோதனை..

இந்த விபத்தில் இரண்டு கார்கள் சம்பந்தப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்தனர்.

சாங்கி பொது மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டபோது 23 மற்றும் 24 வயதுடைய இரண்டு பெண்கள் மற்றும் 25 வயதுடைய ஆடவர் சுயநினைவுடன் இருந்ததாக காவல்துறை தெரிவித்துள்ளனர்.

சமூக வலைத்தளங்களில் பரவும் காணொளியில், சாலை தடுப்பில் கார் மோதி, மறுபுறச் சாலையில் புரண்டு செல்வதை காணமுடிகிறது.

இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறை விசாரணை நடந்து வருகிறது.

(PHOTO: SG Road Vigilante/FB)

டிப்பர் டிரக்குடன் சைக்கிள் மோதி விபத்து – ஒருவர் மருத்துவனையில்..

சிங்கப்பூர் செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்…