டிப்பர் டிரக்குடன் சைக்கிள் மோதி விபத்து – ஒருவர் மருத்துவனையில்..

Tanah Merah accident
(Photo: SG Road Vigilante/Facebook)

சிங்கப்பூரில் இன்று (ஜன. 9) காலை, 45 வயதான சைக்கிள் ஓட்டுநர் ஒருவர் டிப்பர் டிரக்குடன் விபத்தில் சிக்கியதை அடுத்து மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்டார்.

இன்று காலை 8:55 மணியளவில் Tanah Merah Coast சாலையில், Xilin Avenue நோக்கி செல்லும் வழியில், ஏற்பட்ட இந்த விபத்து குறித்து தகவல் கிடைத்ததாக சிங்கப்பூர் காவல் படை (SPF) தெரிவித்துள்ளது.

Junction 8 மாலின் மேற்கூரை பலகை ஆடவர் ஒருவர் தலையில் விழுந்து விபத்து

விபத்தில் சிக்கிய சைக்கிள் ஓட்டுநர் தரையில் கிடப்பதைக் காட்டும் இந்த சம்பவத்தின் படங்கள் SG Road Vigilante என்ற பேஸ்புக் பக்கத்தில் பகிரப்பட்டன.

இந்த சம்பவம் Tanah Merah Coast சாலையில் சைக்கிள் ஓட்டும் பாதையில் நடந்தது குறிப்பிடத்தக்கது.

அந்த நேரத்தில் அவருடன் குறைந்தது நான்கு சைக்கிள் ஓட்டுநர்கள் உள்ளதையும் காணலாம்.

SPF தகவலின் படி, சாங்கி பொது மருத்துவமனைக்கு அனுப்பும்போது அந்த சைக்கிள் ஓட்டுநர் சுயநினைவாக இருந்தார் என்று குறிப்பிட்டுள்ளது.

காவல்துறை விசாரணை நடந்து வருகிறது.

அலெக்ஸாண்ட்ரா சாலையில் டாக்ஸி, மோட்டார் சைக்கிள் மோதி விபத்து

சிங்கப்பூர் செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்…