மலேசியாவுக்கு ஏற்றுமதி செய்யப்பட்ட நாமக்கல் முட்டைகள்!

Photo: Tamilnadu Minister K.N.Nehru Official Twitter Page

தென்கிழக்கு ஆசிய் நாடுகளில் முட்டை விலை அதிகரித்துள்ள நிலையில், முட்டைகளை ஏற்றுமதி செய்ய மலேசிய அரசு இந்திய அரசுக்கு வேண்டுகோள் விடுத்தது. இதையடுத்து இந்தியாவிலிருந்து முதன் முறையாக தென்கிழக்கு ஆசிய நாடுகளில் ஒன்றான மலேசியாவிற்கு முட்டை ஏற்றுமதி செய்ய ஏற்பாடு செய்யப்பட்டது.

கெந்திங் மலை அருகே நிலச்சரிவு: மூன்று சிங்கப்பூரர்களை மீட்ட மலேசிய அதிகாரிகள்!

அதன்படி, திருச்சி விமான நிலையத்திலிருந்து மாதம் 5 கோடி கோழி முட்டைகள் மலேசியாவிற்கு ஏற்றுமதியாக உள்ள நிலையில் முதல்கட்டமாக 2 லட்சம் கோழி முட்டைகளின் ஏற்றுமதியை தமிழக அமைச்சர் கே.என்.நேரு தொடங்கி வைத்தார்.

Photo: Tamilnadu Minister KN Nehru Official twitter page

இதனால் தமிழக முட்டை உற்பத்தியாளர்கள் பயனடைவார்கள். முன்னதாக, நாமக்கல் மாவட்டத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் இருந்து முட்டைகள் வாகனம் மூலம் திருச்சி விமான நிலையம் வரப்பட்டது. பின்னர், அந்த முட்டைகள் விமானம் மூலம் மலேசியாவுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

பூனைக்கு நீதி கோரி ஆன்லைனில் குவியும் மனு! – மாடியிலிருந்து வீசப்பட்ட பூனை!

திருச்சி விமான நிலைய வளாகத்தில் டிசம்பர் 15- ஆம் தேதி நடைபெற்ற நிகழ்ச்சியில் அரசு உயரதிகாரிகள், தனியார் முட்டை நிறுவனத்தின் அதிகாரிகள், விமான நிலையத்தின் உயரதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்துக் கொண்டனர்.